3
தமிழர் பண்பாட்டின் வரலாறு
உலகம் தோன்றிப் பன்னெடுங்காலம் கழிந்து விட்டது. உலகம் தோன்றிய காலத்தில் இக்குழம்பாக இருந்த மண் முதலில் குளிர்ந்து அமைந்த நிலப்பகுதி தென்னிந்தியாவே என்றும், இங்குத்தான் முதன் முதலில் மனித இனம் தோன்றி இருக்கக் கூடும் என்றும் புவி இயல் ஆராய்ச்சியாளர் பலர் கருதுகின்றனர். இப்போது இந்தியக் கடலாக உள்ள பகுதியில் பரப்பான கிலமும் மலேயும் ஆறும் இருந்து பிறகு கடலில் ஆழ்ந்து மறைந்தன என்று கூ று கி ன் ற ன ர். பழந்தமிழ் இலக்கியங்களும் குமரிமலை, பஃறுளியாறு முதலியன இருந்து கடல்கோளால் மறைந்தன என்று குறிப்பிடு கின்றன, இதல்ை பழந்தமிழ் நாட்டு மக்களே தொன்மையான மக்கள் இனம் என்ற கருத்து வலியுறு கின்றது. தமிழர் வாழ்வு பழமை உடைத்து ஆதலினல் தமிழர் வாழ்வும் படிப்படியே சிறப்பாக வளர்ந்து கல்ல வாழ்வு பெற்று நாளடைவில் அவ்வினத்திற் கென்றே ஒரு தனிப் பண்பாடு வளர்ந்தது.
பண்பாடு என்ற சொல் பண் + பாடு என அமையும். இதன் பொருள் சான்றாண்மையாகிய ஒழுக்கம் அல்லது உயர்ந்த வழிச் .ெ ச ல் லு த ல் என்பது ஆகும்.
1. ‘பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’
-சிலப்பதிகாரம்: 41. 19 20.