பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39



“பண்பெனப் ப டு வ து பாடறிந் தொழுகுதல்’ “ “பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ முதலான தொடர்புகள் பண்பாடு’ என்ற சொல்லின் பொருளே உணர்த்தும்.

அகமும் புறமும் பண்டைத் தமிழர் தம் வாழ்வினே அகம் புறம் என இருபிரிவாகப் பகுத்து ஒழுகினர். அகம் என்பது, ஒத்த வயது, ஒத்த குணம், ஒத்த அழகு, ஒத்த திரு உடைய தலைவனும் தலைவியும் தம்முட் கூடித் தாமே அனுபவித்துப் பிறருக்குக் கூறப் படாததாய இன்பமாகும். புறம் எனப்படுவது வாழ்வின் பிற கூறு பாடுகளாகிய வீரம் கொடை முதலிய பண்புகளே உணர்த்தும். பழந்தமிழ் இலக்கியங்களாகிய பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும் பழந்தமிழர் வாழ் வினையும், அவர்தம் ւ9 (Ջ சார்ந்த பண்பாட்டின் பெருமையினையும் பரக்கப் பேசுகின்றன.

அகவாழ்வு: குடும்ப வாழ்விற்குப் பழங்காலத்தில் பெருமதிப்பு இருந்தது. கற்பு நெறியில் கின்று இல் வாழ்க்கை நடத்தி, வரும் விருந்தினரைப் பேணி, மக்களைப் பெற்று மாண்புற வளர்த்திடும் மனேவி

குடும்பத் தலைவியாக மதிக்கப்பட்டாள். “மனேக்கு விளக்கு ஆகிய வாணுதல்’ என்று குடும்பத் தலைவி பாராட்டப் பெற்றாள். திருவள்ளுவரும் ‘மங்கலம் என்ப மனைமாட்சி’ “ என்று இத்தகைய அன்பு

வாழ்க்கையினைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். குடும்ப

வாழ்க்கை இல்லறம் என்ற நல்லறமாகப் போற்றப்

பெற்றது. கணவன் மகிழும் வகையில் உணவு சமைத்து

அளித்தலும், வரும் விருந்தினரை இன்முகத்தோடு

2. நெய்தற்கவி: 16

3. தி.குக்குறள் : 996 4. திருக்குறள் : 60