40
வரவேற்று உபசரித்தலும், சுற்றத்தினரைக் காத்தலும் மனைவியின் கடமைகளாகக் கருதப்பட்டன. பண்பு நிறைந்த மனைவியை வாழ்க்கைத்துணையாகப் பெற்று வாழும் நெறியே ஒருவன் வாழ முயலும் நெறிகளுள் சிறந்தது என்று கருதப்பட்டது. சுருங்கச் சொன்னால் ஆண்களுக்குத் தாம் மேற்கொண்ட கடமையே உயிராகவும், மகளிர்க்குத் தம் கணவனை உயிராகவும் கொள்ளப் பெற்றனர் என்பது அறியக் கிடக்கின்றது.”
புறவாழ்வு : புறத் துறையிலும் அறநெறி போற்றி வாழ்ந்த இனம் தமிழ் இனமாகும். புறத்துறையில் முதலாவது இடம் பெறுவது அரசியலாகும். மக்களுக்காகவே மக்கள் நலத்திற்காகவே மன்னர்கள் அக்காலத்தில் வாழ்ந்தனர். நீதியுடனும், நேர்மையுடனும் ஆளும் மன்னவன் மக்களால் “இறை" என மதிக்கப் பெற்றான். திருவள்ளுவரும்,
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்“
என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மன்னனே கெல்லினும், நீரினும் உயிராகக் கருதப் பட்டான். பழந்தமிழ்நாட்டில் மன்னனிடத்தில் நால்வகைப் படையும் சிறப்புற அமைந்திருக்தாலும் அவன் வெற்றிக்கு அடிப்படை அப்படைகள்
5."வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்"
—குறுந்தொகை: 135
6. திருக்குறள்-388
7. "நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"
—புறம்136