பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42



நீதிமுறை : காட்டுப் புறங்களிலும் தனித்தனியே நீதி மன்றங்கள் அமைந்திருந்தன. ஒவ்வோர் ஊரிலும் ஊர்ப் பெருமக்கள் கூடி ஊரின் நலனை நாடி ஊரை ஒட்டிய பொதுக் கடமைகளைச் செய்து வந்தனர். அவர்கள் கூடி ஊர் வழக்குகளை, ஊர்ச் செய்திகளைத் தீர்மானித்த இடம் ‘மன்றம்’ எனப்பட்டது, நகர மக்களுக்குள் வழக்கு நேரும்போது வழக்கைக் கேட்டுத் தீர்ப்புக் கூறுவதற்கு நீதிமன்றம் இருந்தது, இந்நீதிமன்றம் “அறங்கூறு அவையம்” என்று அங்காளில் போற்றப்பட்டது. நாடு முழுவதும் அறங்கூறு அவையத்தார் நடுநிலை திரியாமல் நீதியைக் காக்குமாறு பார்த்து வருவது அரசனுடைய பொறுப்பாக இருந்தது. அக்காலத்தில் பத்திரங்களைப் பதிவு செய்யும் முறை சிறக்க அமைந்திருந்தது. பத்திரங்கள் பனையோலை, செப்பேடு முதலியவற்றில் வரையப் பெற்றிருந்தன. பெருஞ்சுவர்களின் கற்களிலும் சில ஆவணங்கள் பொறிக்கப் பெற்றிருந்தன. ஆவணங்களைப் பதிவு செய்து காக்கும் நிலையம் ‘ஆவணக் களரி’ எனப்பட்டது.

வாணிகம் : ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு. முதுகெலும்பாக விளங்குவது உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபமாகும். வாணிகத்துறை நெறியும் நேர்மையும் கொண்டதாக இலங்கியது. அங்குக் களவுக்கும் வஞ்சத்திற்கும் கடுகளவும் இடமுல்லை. அக்கால வாணிகர் நாடு நிலைமை நாடிய நல்ல நெஞ்சினர் என்றும், பழிக்கு அஞ்சி உண்மையே உரைத்தார்கள் என்றும் தம் பொருளையும் பிறர் பொருளையும் ஒப்பவே கருதினார்கள் என்றும், பிறரிடமிருந்து கொள்வது மிகையாகக் கொள்ளாமலும் பிறருக்குக் கொடுப்பது குறைவாகக்