44
எழுப்பத் துணைபுரிந்திருக்கின்றன. யானை, மயில் தோகை, அகில், சந்தனம், முத்து முதலிய பொருள்கள் எகிப்துக்கும் சிரியாவுக்கும் பாபிலோனியாவுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாயின. தமிழ் அரிசி, “அரிசா” என்று வழங்கப்பட்டு, கிரேக்க மொழியில் “ரைஸ்” ஆனது; சந்தனம் “சந்தல்” ஆனது: முத்து வட மொழியில் “முத்தா’ ஆனது; தமிழ் நாட்டிலிருந்து முத்து, மிளகு, அரிசி, மயில், யானைத்தந்தம், பருத்தியாடை முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின. மது வகை, கருப்பூரம், மணநீர், குங்குமம், குதிரை முதலியவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, முசிறி, தொண்டி முதலியன அக்காலத்தில் சிறந்த துறைமுகப் பட்டினங்களாக விளங்கின. ஓடம், பரி, பரிசல், புணை, கப்பல், கலன், வங்கம், நாவாய், தோணி, திமில், அம்பி முதலான பெயர்ச்சொற்கள் ஓடங்கள், கப்பல்கள் பல இருந்தன என்பதற்குச் சான்றுகளாகும். பண்டமாற்றாேடு நாணயமாற்றும் ஓரளவு இருந்து வந்தது. தமிழ் நாட்டோடு உரோமர், கிரேக்கர், அராபியர் தமிழ் நாட்டுக் கடற்கரைப் பட்டினங்களுக்கு வந்து தங்கி வாணிபம் செய்தனர். உரோம நாட்டுக் குறிப்புக்களின்படி (Peutingerian Tables of 225 A.D.) ஈராயிரம் உரோமர்கள் அடங்கிய படை ஒன்று முசிறித் துறைமுகத்தில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. தமிழ் காட்டு முத்தை உரோம நாட்டுப் பெண்டிர் பெரிதும் விரும்பினர். உலோலா என்னும் உரோம காட்டு அரசி 300,000 தங்க நாணயத்திற்கு ஈடான முத்துக்களை அணித்திருந்தாள். உரோம நாட்டு மக்களின் இத்தகைய ஆடம்பர வேட்கையால் அந்நாட்டுப் பொருளாதார நிலைமை மிகவும் பாதிக்கப்பெற்றதாகப் பெரிப்பிளஸ்