47
47
தமிழில் மிகப் பழைய இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் எழுத்துக்களைப் பாகுபாடு செய்துள்ள தொல்காப்பியனர் எழுத்துக்களே உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர் மெய்யெழுத்து எனக் குறியீடுகள் தந்து வழங்கி .யுள்ளார்.
மருந்து : திருவள்ளுவர் மருந்து என்றே ஒரு தனி அதிகாரம் வைத்துள்ளார். மருத்துவன் தாமோதரனர் என்ற புலவர் சங்க காலத்தே வாழ்ந்ததாக அறிகிருேம். பழந்தமிழர்கள் மூலிகைகளின் வேர், தண்டு, இலே, பூ, காய், விதை முதலியவற்றின் குணங்கள் இன்ன இன்ன என்று நன்றாக அறிந்திருந்தனர். சித்தர்கள் எனப்படும் அறிஞர் குழுவினர் சித்த மருத்துவம்’ என்ற மருத்துவத் துறையில் சிறந்து விளங்கினர்.
கலைகள் : தமிழர்கள் கலே நுணுக்கம் மிகுந்தவர்கள்: கலைகளைப் போற்றி வளர்த்தவர்கள். முத்து, பவளம், மாணிக்கம் முதலிய மணிகளின் உயர்வு. தரம், தாழ்ச்சி முதலியனவைகளைத் தேர்ந்தறியும் முறைகளைத் தெளிவாக உணர்ந்திருந்தனர். திருடர்களின் தந்திரத்தை அறிந்து அவரைத் தண்டிக்கக் கருதும் காவலர் கரவடநூல் அறிந்திருந்தனர். யானே குதிரைகளைத் தமிழர் போரில் பயன்படுத்தியதால் யானைகளைப் பற்றியும் குதிரைகளேப் பற்றியும் ஆராய்ந்து தேர்ந்து அறிவதற்கு நூல்கள் இருந்தன. அவை யானைநூல், குதிரை.நால் எனப் பட்டன. யானை, குதிரைகளுக்கு வரும் நோய்களும் அவை தீர்க்கும் முறைகளும் அந்நூல்களில் கூறப்பட்டன. பாம்புகளின் இயல்புகள், வேறுபாடுகள், அவற்றின் ாஞ்சை மாற்றும் மருந்துகள் முதலியவற்றை விளக்கும் நூல் ஒன்று இருந்ததாக கச்சிர்ைக்கினியர் எழுதிய உரையால் தெரிய வருகின்றது. ‘’ ஒரு காளை அறுபது
15, gas சிந்தாமணி ; 1288.ஆம் செய்யுள் உரை.