ஒருவாத புகழுடைய திருவாசகம் தந்த திருவாத ஆரராம் மணிவாசகப் பெருந்தகையார் இமைப்பொழுதும் தம் நெஞ்சில் நீங்காத நினைவுடைய சிவனெனும் நாமந் தமக்கேயுடைய செம்மேனி அம்மானைக் குறிப்பிடும் பொழுது ‘முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக் கும் புதுமையாய்ப் பேர்த்தும் அப் பெற்றியன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அத்தகு புகழுரை நந்தமிழ் மொழிக்கும் பொருந்தும். காலந்தோறும் வேகச் சுழிப்புட்ன் விரைந்து ஒடிவரும் தமிழ் இலக்கியப் பேரியாற்றிலே பல்வேறு திருப்பங்களையும் போக்குகளையும் காண்கிருேம்; காலம் பல கழிந்தாலும் தமிழன்னையின் எழிலார்ந்த பேரழகு குறைய வில்லை. அவ்வக் காலங்களில் வாழ்ந்த பெரும் புலவர்கள் தமிழன்னையின் எழிலார்ந்த பேரழகுக்கு அழகு கூட்டும் வகையில் புத்தம் புதிய அணிகளை நித்த நித்தம் கவின்பெற ஆக்கி அளித்துள்ளனர். தமிழன்னையின் எழிலார்ந்த திருக் கோலம் காண்போர் நெஞ்சை ஈர்க்கும் பெற்றியதாகும்.
இலக்கிய அணிகள்’ என்னும் பெயரிய இந்நூலில் இருபத்து மூன்று கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இக் கட்டுரைகள் அவ்வப்போது பல்வேறு சூழல்களில் எழுதப் பட்டவையாகும்; சில வானெலிப் பேச்சுக்கள்; சில மலர் களுக்கு எழுதப்பட்டனவாகும். இவை தனித்தனியே தலைப் பிற்கேற்பப் பல்வேறு சமயங்களில் எழுதப்பட்டன வாகையால் இக்கட்டுரைகளில் சில கருத்துக்கள் மீண்டும் iமீண்டும் இடம் பெற்றிருக்கக் காணலாம். அவற்றைக் ‘கூறியது கூறல்’ என்ற குற்றத்தின்பாற் கொள்ளாமற்.