48
48
ாாழியாகப் பகுத்து நாழிகைகளே அறிவிப்பதற்குப் பயன் படுத்தப்பட்ட கருவி “காழிகை வட்டில்’ எனப்பட்டது. இக்கருவியைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுப் பொதுமக்களுக்கு உரைப்போர் நாழிகைக் கணக்கர்’ எனப்பட்டனர்.
தமிழரிடையே பலவகை விளையாட்டுக்கள் கிலவின. சிறு தேர் உருட்டல், சிறுபறை முழக்கல் முதலிய விளையாட்டுக்களைச் சிறுவரும், சிறுவீடு கட்டல், மணற் சோறு சமைத்தல் முதலிய விளையாட்டுக்களைச் சிறுமி யரும் நிகழ்த்தி வந்தனர். குரவைக் கூத்து, பந்தாடுதல், கழங்காடுதல், அம்மானே ஆடுதல், ஊசல், தெள்ளேணம் கொட்டுதல், கும்மி முதலியன மகளிர் விளையாட்டுக் களாக இருந்தன. நீர் விளையாட்டினை இருபாலரும் மேற்கொண்டிருந்தனர். ஆண்கள் யானையேற்றம், குதிரை யேற்றம், மற்போர், சிலம்புப் பயிற்சி முதலியவைகளைப் பழகி வந்தனர்.
தமிழர்க்கே உரித்தான பழைய இசை சிறப்பாகக் துலங்கியது. இசையும் நடனமும் ஆகிய கலைகள் தமிழரின் பழைய கலைகள். இக்கலைகளில் தேர்ச்சி பெற்ற பாணர், கூத்தர் முதலிய கலைஞர் தொன்றுதொட்டே வழிவழி வந்தனர். அரசரும் மக்களும் இக்கலைஞர்களுக்கு மதிப்புத் தந்து ஆதரித்தனர். இசைக்கருவிகள் பல வகைப்பட்டன. யாழ் சிறப்பாகப் போற்றப்பட்டது. தோற்கருவிகள், துளேக்கருவிகள், நரம்புக்கருவிகள், கஞ்சக் கருவிகள் என நான்கு வகை இசைக்கருவிகள் இருந்தன. தமிழர் வாழ்வே பாட்டாகப் பரிணமித்தது; கூத்தோடு இணைந்திருந்தது.
நில அமைப்பும் மக்கள் வாழ்வும் : தமிழ்நாட்டு கில அமைப்பையும் மக்கள் வர்ழ்க்கையையும் ஆராய்ந்து தொல்காப்பியனர் ஒவ்வொரு வகை நிலத்திற்கும் ஒவ்