பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49

வொருவகை யாழினேயும் பறையினையும் கூறியுள்ளார். ஓவியக்கலை சிறப்புறத் துலங்கியது. கெய்த ஆடைகளிலும் செய்த பொருள்களிலும் தமிழர் ஒவியங்களை அமைத்தனர். தமிழர் வாழ்வில் அழகுணர்ச்சியும் கலையுணர்ச்சியும் விரம்பித் ததும்பின. அங்காளில் திருப்பரங்குன்றத்தின் கோயிற் சுவரில் சிறந்த ஒவியங்கள் எழுதப்பெற்றிருந்தன என்று பரிபாடல் கூறுகிறது. நாடகக் கலையிலும் தமிழர் கைவந்தவர்கள். நடனக்கலையின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் விரிவாகக் குறிப்பிடுகின்றது: கடன அரங்கு, நடன அரங்கின் அமைப்பு, இசையாசிரியரின் அமைதி, நடன ஆசிரியரின் அமைதி, தண்ணுமையாசிரியனுடைய அமைதி முதலியவற்றைப் பற்றியெல்லாம் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை விரிவாகக் குறிப்பிடுகின்றது. ஒருமுக எழனி, பொருமுக எழனி, கரந்து வரல் எழினி என்று மூவகையாகத் திரைச் சீலைகள் இருந்ததனேச் சிலப்பதிகாரம் கொண்டு அறியலாம்.

கட்டடக் கலையில் தமிழர்கள் பெரும்புலமை காட்டினர். வீடுகள் அமைப்பும், நகர அமைப்பும், தெருக் களின் அமைப்பும் அழகாகத் துலங்கின. அக் காளேய மதுரைமாாகரின் அமைப்பினே நூல்கள் சிறப்புறக் கூறு கின்றன. நகரங்கள் நெடிய மதில்களைக் கொண்டிருந்தன. மதில்களைச் சுற்றிலும் அகழிகள் வெட்டப்பட்டு நீர்விடப் பட்டு அக்ரிேல் கொடிய முதலைகள் விடப்பட்டன. மதில் மேல் பல எந்திரங்கள் பகைவர் படை எடுக்காதபடி தடுக்கும் வகையில் அமைந்திருந்தன. அங்காளில் நகரமைப்பு முறை சிறப்பாக இருந்தது. ஆறு கிடந்தன்ன அகன்ற னெடுந்தெருக்கள் இருந்தன. நகரங்களில் பூங்காக்கள் ஆங்காங்கே விளங்கின. பல மாடிகளைக் கொண்ட

4