பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

51

என்பதனை அறிகிருேம். விழாக்களில் இசையும் கூத்தும் தப்பாது இடம் பெறும். மக்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்.

முடிவுரை தமிழர் பண்பாடு பழமையானது; போற்றத் தக்கது; பல சிறப்புக்களை உடையது. குடும்ப வாழ்வில் துளிர்த்த பண்பாடு பொது வாழ்விலும் பொலிவுற்றுக் திகழ்ந்தது. பிறர் வாழவேண்டும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற பரந்துபட்ட மனப்பான்மையில் தமிழர்தம் சமுதாய அறம் அமைந்திருந்தது. “நாடெல்லாம் வாழக் கேடொன்று மில்லை’ என்ற கருத்தின் அடிப்படை, பண்பாட்டின் உறைவிடமாகத் துலங்கியது. தனி மனிதன் செம்மையாக வாழ்ந்தால் சமுதாயம் வளர்ச்சி பெறும் என்ற கருத்தின் அடிப்படையில், உள்ளம் திருந்தில்ை உலகம் திருந்தும் என்ற உயரிய உண்மையில் பண்பாடு செழித்தது. “தமிழன் என்றாேர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்றபடி தமிர்தம் பண்பாடு தனித்தன்மை வாய்ந்ததாகும். ‘பண்பாளர்கள் பலர் வாழ்வதாலேயே இவ்வுலகம் வாழ்கிறது; வளர்கிறது” “ என்று திருவள்ளுவர் கூறியதற்கு ஒப்பத் தமிழ்ப் பண்பாடு வரலாற்றிற்கெட்டாத அங்காள் தொடங்கிப் பரவிச் செழித்து வருகின்றது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ “ என்ற கணியன்பூங் குன்றனரின் குரல் தமிழினத்தின் குரலாகும்,

18. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது வின்றேல்

மண்புக்கு மாய்வது மன்’

-திருக்குறள்: 998 17. புறநானூறு: 193