பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58

“ கின்று நிலைஇயர் கின்ாாண்மீன், கில்லாது

படாஅச் செலீயர் பகைவர் மீனே’ “ என்ற புறப்பாட்டு அடிகளின் விளக்கம், ஒருவர் பிறந்த நாளன்று விண்ணில் மதிகின்ற இடத்திலிருந்த மீன்தான் காள்மீன் எனப்படும் என்பதனைத் தெரிவிக்கின்றது.

மதுரைக்காஞ்சியில் சேரனின் பெருமங்கலம்

5. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாராட்ட வந்த புலவர் மாங்குடி மருதனர். சேர மன்னைெருவனின் பிறந்தநாள் விழாவின் மகிழ்ச்சி ஆரவாரத்தினை உவமையாக எடுத்துக் கையாண்டு: பாராட்டியுள்ளார். பிறந்த நாளன்று சேர மன்னன், கூத்தரும் சுற்றத்தினரும் ஒருங்கே வாழ்த்த, எல்லாக் கலைகளையும் உணர்ந்த பல சமயத்தவர் மாறுபட்டுக் கூறும் சமய தருக்க வாதங்களை விரும்பிக் கேட்டுக் கொண்டிருக் தான் என்ற குறிப்பு மதுரைக்காஞ்சியால் * பெறப்படு: கின்றது. மேலும் அந்நூலிலேயே நன்னன் என்னும் குறுகில மன்னனின் பிறந்தநாள் விழாவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

“ . . . . . . . . . . . . . . . . . . ...சேரிதோறும்

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ

வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்

பேரிசை மன்னன் பெறும்பெயர் கன்னுள்

சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு’ “ என்ற மதுரைக்காஞ்சிப் பகுதியால் முடியுடை வேங்க

23. புறநானூறு : 24: 24-25 24. கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துத்

தண்கடல் நாடன் ஒண் பூங் கோதை பெருநாள் இருக்கை விழுமியோர் குழிஇ விழைவுகொள் கம்பலே கடுப்ப’

-மதுரைக்காஞ்சி : 523-526. 25. மதுரைக்காஞ்சி : 615-619.