பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

ருடையதேயன்றிக் குறுகில மன்னரின் பிறந்தநாள் விழாவும் பழந் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது எனத் தெரியவருகின்றது.

சிலப்பதிகாரமும் செங்குட்டுவன் பிறந்த நாளும்

6. சிலப்பதிகாரத்தில் சேரவேந்தன் செங்குட்டுவனின் பிறந்த நாள் விழாப் பற்றிய குறிப்பு விரிவாகப் பேசப்படுகின்றது. கண்ணகிக்குச் சிலை வடிக்கக் கல் கொணர வடகாடு சென்ற செங்குட்டுவன் தன் பிறந்த நாள் நெருங்குகின்றதனை யறிந்து விரைந்து தன் வஞ்சிமூதூர் திரும்பி வருகின்றான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது:

'வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் கவடி வித்திய கழுதையே ருழவன் குடவர் கோமான் வந்தான் நாளைப் படுநுகம் பூணுய் பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணியாமெனும் தொடுப்பேர் உழவ ரோதைப்' பாணியும்.'

இவ் அடிகளால் மாடுகளும் செங்குட்டுவன் பிறந்த நாளில் உழுதலை யொழிந்து உவகையுடன் இருந்த செய்தி புலனுகின்றது அமர்க்களத்தில் அஞ்சாது மாற்றார் மறம் சாய்த்த மறவர்களுக்கு மன்னன் பிறந்த நாளிலும் மிகுதியாகப் பொன்னுலாகிய வாகைப். பூமாலையினைப் பரிசளிப்பான் என்பதும் சிலப்பதிகாரத்தின் வழி அறிய முடிகின்றது.


26. சிலப்பதிகாரம்: நீர்ப்படைக்காதை: 225–230. 27. "கூற்றுக்கண் ணேட அரிந்துகளங் கொண்டோர் நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து புறம்பெற வந்த போர்வாள் மறவர் வருக தாமென வாகைப் பொலந்தோடு பெருநா ளமயம் பிறக்கிடக் கொடுத்து" -சிலப்பதிகாரம் : நீர்ப்படைக்காதை: 40-44.