பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

60

பிற்கால நூல்களில் பிறந்தநாள் பெருமங்கலம்

7. 1. மணிமேகலைக் காப்பியம் “புவிகா வலன்றன் புண்ணிய கன்னுள் “28 என்று மன்னனின் பிறந்த நாளினைப் புண்ணிய கன்னுள் என்று போற்றுகின்றது. அரசனுக்கு மகன் பிறந்திட்ட பொழுது, அவன் இறை தவிர்த்தலும் சிறைவீடு செய்தலும் உண்டென்பது சிந்தாமணிக் காப்பியத்தின் வழித் தெரியவருகின்றது. 29 கம்ப ராமாயணத்திலும் இதனை யொத்த செய்தி காணப் படுகிறது. இராம இலக்குமண பரத சத்துருக்கனர் பிறந்த செய்தியினைக் கேள்வியுற்ற தசரதன், நாடு முழுவதும் பதின்ைகு ஆண்டுவரை வரியில்லாமல் ஆகுக என்றும் பொருள் நிறைந்த கருவூலங்களை ஏழைகள் அவரவர் விருப்பப்படி வாரிக் கொள்க என்றும், எவ்விடத்திலும் போர்த் தொழில் ஒழிக என்றும், சிறையிலடைப்பட்டுள்ள முடிபுனைந்த பகையரசர் விடுதலை செய்யப்பெற்றுத் தம்தம் ஊர் செல்க என்றும் கூறிப் பறையறையச் செய் விக்கின்றான்.

“ இறைதவிர்க் திடுகபார் யாண்டொர் ஏழொடுஏழ் முறைநிதிச் சாலை தாழ்நீக்கி

யாவையும்.
முறைகெட வறியவர் முகந்து கொள்களன  அறைபறைஎன்றனன்அரசர் 

கோமகன் "படையொழிந் திடுகதம் பதிகேளேனனி விடைபெறு குகமுடிவேந்தர் வேதியர் நடையுறு நியமமு கவையின் றுகுக புடைகெழு விழாவொடு பொலிக வெங்கணும்.”30

மேலும் அப் பிறந்தநாள் விழா நாட்டு மக்களால்

28. மணிமேகலை : 28 : 9

29. சீவக சிந்தாமணி, நாமகள் இலம்பகம்: 277.280. -30கம்பராமாயணம்; திருவவதாரப் படலம்: 112-113.