பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

61

ாலமுறக் கொண்டாடப் பெறவேண்டும் என்றும் பறை யறையச் செய்விக்கின்றான்:

“ ஆலயம் புதுக்குக வந்த ணுளர்தம்

சாலையுஞ் சதுக்கமுஞ் சமைக்க சக்தியுங் காலையுமாலையுஙயகடவுளர்க்கணி மாலையுங் தூபமும் வழங்கு கென்றனர்."31

மேலும் சூளாமணிக் காப்பியத்திலும் பிறந்தநாள் விழா பேசப்படுகின்றது. அந்நாளில் பகையொழித்து நல்ல றம் செழிப்பதும், வெள்ளணி யணிந்து அரசர் விருந்தோம்பு தலும் நிகழும் என்பர். 32

7. 2. மன்னரே யன்றிப் பட்டத்து யானையும் வெள்ளணி யணிந்து விளங்கும் என்பது சிந்தாமணி யாலும்’ பெருங்கதையாலும்” அறியப்படுகின்றது. ‘மங்கல அணியினர்’ என்ற தொடருக்கு “வெள்ளணி யணிந்தவர் என நச்சினர்க்கினியர் உரையெழுதியுள்ளார். எனவே தமிழ் நாட்டு மக்களுக்கு வெள்ளேயுடையே மங்கல உடையாகும். இக்காலத்தும் திருவனந்தபுர அரசர்க்குள் சென்ம தினக் கொண்டாட்டம் சி ற ப் பா க வே நடைபெறுதலோடு, அவ்வரசர் மூலங் திருநாள்’, ‘விசாகங் திருநாள்’ எனத்

31. கம்பராமாயணம் : திருவவதாரப் படலம் ; 114.

82. சூளாமணி; சுயம்வரச் சுருக்கம்: 211-212 38. சீவகசிந்தாமணி இலக்கணயா லம்பகம்: 10, 11, 54.

34. பெருங்கதை; 1 : 39 : 74. வெண்டுகில் பூட்டிய வேழக்

குழவியும்.

35. சீவகசிந்தாமணி ; காந்தருவதத்தையா ரிலம்பகம்: 111.