பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

62

தங்கள் பிறந்த நட்சத்திரங்களையே பெயர்களாகக் கொண்டு விளங்குதலும் ஒப்பிடற்பாலது. 36

7. 3. “இக்காலத்து மேனுட்டார் போர்நிகழ்ச்சியிலும் வெள்ளைக்கொடி பிடித்துப் போரிடையே பகைவர் வருவாராயிற் அது சமாதானத்தைக் குறிப்பதாகக் கருதப்படு தல் ஈண்டு ஒப்பிடற்பாலது. போர் நிறுத்துதற் கறிகுறியாகத் "துத்துகில் வீசும் பண்டை வழக்கும் அறியத்தகும்’ என்று பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.”

கல்வெட்டு உணர்த்தும் சோழர் பெருமங்கலம்

8. பிற்காலச் சோழர் காலத்திலும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதனைத் தமிழக வரலாறு கொண்டும் அறியலாம். கி. பி. 985 முதல் கி. பி. 1014 வரை சிறப்புடன் அரசாண்ட சோழப் பெருவேந்தன் முதலாம் இராசராச சோழன் ஐப்பசி சதய நாளில் பிறந்தவன். இவனைச் சதய காள் விழா உதியர் மண்டலங் தன்னில் வைத்தவன்’ என்று கலிங்கத்துப் பரணி” கூறும். மேலும் இவன் எடுப்பித்த தஞ்சை இராசராசேச்சுரத்திலும் இவன் பட்டத்தரசி திருவையாற்றில் கட்டுவித்த உலக மாதேவீச்சுரத்திலும் திங்கள்தோறும் சதயநாளில் சிறப்பாக விழா நடைபெறு வதற்கு கிவந்தங்கள் விடப்பட்டிருந்ததனைக் கல்வெட்டுச் செய்தி” கொண்டு அறியலாம்,

86. திரு. மு. இராகவையங்கார், சேரன் செங்குட்டுவன், ஐந்தாம்

பதிப்பு, 1964, பக். 134.

37. திரு. மு. இராகவையங்கார், தொல்காப்பியப் பொருளதிகார

- ஆராய்ச்சி, மூன்றாம் பதிப்பு, பக். 147. 38. கலிங்கத்துப்பரணி : 8 : 24,

39. S. I. I. Vol. II., No. 26.