64
64
பாடீர்’ என்று கலிங்கத்துப் பரணி, முதலாம் குலோத்துங்க சோழனின் பிறந்த காட் பெருஞ்சிறப்பினைப் பாராட்டு கின்றது:
“எற்றைப் பகலிலும் வெள்ளணிகாள்
இருநிலப் பாவை நிழலுற்ற
கொற்றக் குடையினைப் பாடீரே
குலோத்துங்க சோழனைப் பாடீரே.’ “43
பிற்காலப் பாண்டியரும் பிறந்தநாள் விழாவும்
10. 1. பிறந்தநாள் விழா பிற்காலப் பாண்டியர் ஆட்சியிலும் நிகழ்ந்ததனைப் பாண்டியர் வரலாறு காட்டு கின்றது. அரசர்கள் தம் பிறந்தநாள் விழாக்கள் ஆண்டு. தோறும் கோவில்களில் நடைபெறுமாறு பொருள் வழங்கி வந்தனர் என்பதனைக் கல்வெட்டு ஆராய்ச்சிப் பேரறிஞர் திரு. வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் பாண்டியர் வரலாறு’ என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.44
10. 2. “அாசன் பிறந்த காளன்று ராஜப் பிரமுகர்கள் அரசருக்கு உதவித் தொகைகள் பரிசளிக்க வேண்டும். இதே போல அரசனின் குழந்தைகள் பிறந்த நாட்கள் முதலிய வற்றிற்கும் அளித்தாக வேண்டும்" என்று வரலாற்றுத் துறைப் பேராசிரியர் திரு. க. அ. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 45
43. கலிங்கத்துப்பரணி : 18 : 12.
44. திரு. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு,
தான்காம் பதிப்பு, 1982, பக். 191, 192,
45. திரு. க. அ. நீலகண்ட சாஸ்திரியார், தமிழர் பண்பாடும்
வரலாறும்- முதற் பதிப்பு, பக், 96.