5
‘முதலாந் திருமுறை’, ‘வள்ளலார் வாழ்வு’, ‘வள்ளலார் கண்ட சீர்திருத்தம்' ஆகிய மூன்று கட்டுரை களும் சமயஞ் சார்ந்தனவாகும். ஆயினும் இக் கட்டுரை களில் இலக்கியச் சிறப்பும் இலங்கக் காணலாம்.
இறைவன் மாட்டு ஈடுபாடு கொண்டுள்ள எனக்கு அவர் தம் கணக்கிலாப் பேரருள் விள்க்கமாகத் தோன்றுவது இயற்கைக் காட்சிகள் வழங்கும் இனிய இன்பமாகும். எனவே இந்நூலின் இறுதிக் கட்டுரை 'இயற்கை இன்பம்' என்னும் தலைப்பினைப் பெற்றுள்ளது. புலனவிற் பிறந்த செஞ்சொற்கவியின்பம் இக் கட்டுரைகளில் மிளிரக் காணலாம்.
அவ்வப்போது யான் எழுதிய இக்கட்டுரைகளை நூல் வடிவில் வெளியிட்டுக் கொள்ள உரிமை வழங்கிய, சிற்றுார்ச் சிருரும் சீரிய கல்வி கற்கும் பொதுநிலையினை ஏற்படுத்தித் தந்த மதிப்பிற்குரிய துணைவேந்தர் தாமரைச் செல்வர் உயர் .திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்களுக்கும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சீர்சால் ஆட்சிக் குழுவினர்க்கும், பதிவாளர் அவர்களுக்கும் மாரு நன்றியுடையேன்.
எங்கோ ஒரு சிற்றுரில் எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு அன்பு காட்டி, தமிழ்ப்பற்று ஊட்டி, பண்படுத்தித் தமிழுலகில் நடமாட வைத்து இந்நிலைக்கு என்னை ஆளாக்கிய - சான்ருண்மைக்கு ஆழி என விளங்கும் என் பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு. வரதராசனர் அவர்களை இந்த மணியான நேரத்தில் நன்றியுடன் நினைந்து வணங்குகின் றேன். அவர்கள் அளித்த அறிவுச் செல்வத்தின் பயனே இந் நூல் என்று கூறி அமைகிறேன். இனிய விழாக்கள் அயரும் தமிழுலகம் வழக்கம்போல் இந்நூலினையும் வரவேற்கும் என்னும் துணிபுடையேன்.
“தமிழகம்” சென்னை-29 25-4-1972 |
சி. பாலசுப்பிரமணியன் |