69
69
திருவள்ளுவர் ஈகை’ என்றே ஒர் அதிகாரம் வகுத் துள்ளார். 'வறியார்க் கொன் றீவதே ஈகை"என்றும், மேலுலகம் இல்லெனினும், ஈதலே நன்று" என்றும் ஈதலின் சிறப்பினை நன்கு விதந்தோதியுள்ளார்.
மேலும் இறைமாட்சி என்ற அதிகாரத்தில்,
“ அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு"4 என்று குறிப்பிட்டுள்ளார். வேந்தர்க்கு வேண்டுவன திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் ஆகிய கான்கு பண்புகளாகும் என்பது இதல்ை தெரியவருகின்றது. அஞ்சாமைக்கு அடுத்த நில ஈகைக்கு வழங்கப்பட்டிருப்பது நுஃண்ணிதின் அறியத் தக்கது. மேலும் இதே அதிகாரத்தின் இறுதிக் குறள் வருமாறு :
" கொடைஅளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையாளும் வேந்தர்க் கொளி."5' இக்குறளில் வேந்தர்க்கு எல்லாம் விளக்காக வேண்டு மெனில் ஓர் அரசன் வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலு ம், யாவர்க்கும் தலையளி செய்தலும், முறை செய்தலும், தளர்த்த குடிகளைப் பேணலுமாகிய நான்கு செயல்களையும் உடையவனக விளங்குதல் வேண்டும் என்பது வற்புறுத்தப் படுகிறது.
இவ்வாறு அரசர்க்கே உரியதெனச் சிறப்பாக நுவலப் படும் wகைப் பண்பினைப் பண்டை நாளேச் சேர மன்னர் சிறக்கப் பெற்றிருந்தனர் என்பதனைப் பதிற்றுப்பத்து பறும் சங்க நூல் கொண்டு நன்கு தெளியலாம். - 1.திருக்குறள் : 221 2.திருக்குறள் : 222 3. திருக்குறள் : 382 4. திருக்குறள் : 300.