பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70

பதிற்றுப்பத்துப் பாடல்களில் கீழே காணப்பெறும் பதிகங்கள் வழி அங்காளையச் சேர மன்னர் கொடுத்த கொடைப் பெருமையினை உணரலாம். ஆயினும் பதிகம். பாடல்களைப் பாடிய புலவர்களால் பாடப்பட்டது அன்று என்றும், பிற்காலப் புலவர் ஒருவர் எழுதிச் சேர்த்திருக்க வேண்டும் என்றும் அறிஞர் பலர் கருத்துக் கொள்கின்றனர். எனவே இக் கட்டுரையின்கண் பதிகவழி யன்றிப் பதிற்றுப் பத்துப் பாடல்கள் வழிப் புலகுைம் சேர வேந்தரின் ஈகை வளத்தினைக் காண்போம்.

“ உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னர்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள் ‘ “

என்ற குறட் கருத்துப்படி, பகைவரைப் போரில் வென்று: திறையாகக் கொள்ளும் பொருள் வேந்தனுக்கு உரிய பொருள் வருவாய் வகையில் ஒன்றென்பது புலப்படுகிறது. சேர மன்னர்களோ வீரத்தில் மிகவும் வல்லவர்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,

‘ இருமூங்கீர்த் துருத்தியுள்

முரணியோர்த் தலைச்சென்று கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் சேரன் ‘

என்றும்,

செங்குட்டுவன்,

“.........................நீர்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரதவன்”

என்றும்,

6. திருக்குறள் 757 7, பதிற்றுப்பத்து 11: 10 : 2.4 8. பதிற்றுப்பத்து : V; 8 : 3-4