பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72

பருந்தின் கரிய சிறகு போன்று கருமை கொண்டும் கிழிந்தும் இருந்த கந்தல் உடையை நீக்கிப் பட்டுடை (நூலாக்கலிங்கம்) வழங்கினன். மகளிர்க்கு உணவோடும் உடையோடும் இன்றி நல்ல ஒளிவிடும் அணிகலன்களேயும் அளித்தான் என்று மேலும் குறிப்பிடுகின்றார் குமட்டுர்க் கண்ணனர்.

‘நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற கன்ன கிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றாேள் வசையின் மகளிர் வயங்கிழை யணிய அமர்புமெய் யார்த்த சுற்றமொடு நுகர்தற் கினிதுகின் பெருங்கலி மகிழ்வே.’ “

பிறிதொரு பாடலில் புலவர் குமட்டுர்க் கண்ணனர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை அக் காலத்தில் கொடையில் சிறந்திருந்த அக்குரைேடு உவமிக்கின்றார்,

“ அக்குரன் அனைய கைவண் மையே’.”

“படையேருழவன்’ என்றும், ‘பாடினி வேங்தே என்றும். வயவர் வேந்தே என்றும், பரிசிலர் வெறுக்கை’ என்றும். பகம்பிணி மார்ப’ என்றும், கூறிச் சேர வேந்தனின் வீரப் பண்பினையும் ஈரப்பண்பினேயும் ஒருங்கே புலப்படுத்து கின்றார் புலவர்.

இம் மண்ணுலகில் வாழ்கின்ற உயிர்களுக்குத் தயங்காது வழங்குதலில் அவன் வல்லவய்ை உள்ளான் என அவன் கைவண்மையை மேலும் புகழ்கின்றார் புலவர்:

12. பதிற்றுப்பத்து : II; 2 : 19.25

J3. I H II; 4 : 7