பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

73

‘ மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது

ஈத்துக் கைதண்டாக் கைகடுந் துப்பில் புரை வயிற் புரைவயிற் பெரிய கல்கி.”

‘வருநர்க்கு வரையாது பொலங்கலங் தெளிர்ப்ப’ என்ற தொடரால் குமட்டுர்க் கண்ணனர் சேரனின் ஈர நெஞ்சத் கென இன்புறக் கிளத்தி மகிழ்கின்றார். புலவர் புகழப் புகழைத் தன்பால் கிலைநிறுத்தி வாழ்கின்றான் சேரன். கூத்தர்க்குக் குதிரையும், யானையும், தேரும் குறைவற வாரி வழங்குகின்றான் சேரன்.

‘’ புலவர் ஏத்த ஓங்கு புகழ் கிறீஇ

விரியுளை மாவும் களிறும், தேரும் வயிரியர் கண்ணுளர்க்கு ஒம்பாது வீசி.’

இவ்வண்ணம் வாரி வழங்கும் வள்ளற்றன்மையைக் “கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சு’ என்று போற்றிப் புகழ்கின் ருர் புலவர். வயிறு பசி கூர ஈயலன் என்ற தொடரும் சேரனின் மாண்ட கொடைப் பெருமை யினையே குறிப்பிடுகின்றது. இவற்றிற்கெல்லாம் முடி மணியாக,

‘ மாரி பொய்க்குவ தாயினும்

சேர லாதன் பொய்யலன் கசையே.’

என்ற வரிகள் மாரி-மழையோடு சேரலாதனின் கொடைப் பண்பினை ஒப்பிட்டு நோக்கி, மாரி பொய்யி னும் சேரலாதன் ஒரு நாளும் பொய்க்கமாட்டான் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன.

11. பதிற்றுப் பத்து : II; 5 : 35-37 15. பதிற்றுப் பத்து : 11; 10 : 14-16 10. பதிற்றுப் பத்து : II; 8 : 11-12