பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74

இவ்வாறு இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனின் ஈகைத் திறத்தினை இனிதுறக் கிளத்து கின்றது.

அடுத்து, பல்யானைச் செல்கெழு குட்டுவனின் ஈகைப் பண்பினைக் காண்போம். பாலைக் கெளதமனர் கன்கலக் தரூஉம் மண்படு மார்ப என்று மன்னனின் கொடைப் பண்பினைப் போற்றியுள்ளார். மேலும் அவர் “போரடு தானேப் பொலந்தார்க் குட்டுவனே! மழை பெயலைப் பொழி யாது மறந்தவழியும் பெருவிருந்து அளிக்க வல்லை. அரிசியைக் குற்றிக் குற்றிப் பூண் தேய்ந்த உலக்கையினையும், அடைச் சேம்பு போன்ற சோறு சமைக்கும் மடாவினையும், கூர்மையான வாள் கொண்டு கொத்துதலால் ஊனும் குருதியும் படிந்து கோரமாய்ச் சிவந்து தோன்றும் மரக்கட்டையினையும் பின் அட்டிற் சாலையிற் காண்பார் மதி மருளும். உண்பாரும் தின்பாரும் எண்ணிக்கை மிகவும் உடையவராக உன் தலைவாயில் வந்தாலும் ே புரந்தரும் விருந்துவளம் குன்றாத புதுமை கொண்டு: பொலிவதாகும். இத்தகு விருந்து வளத்திற்குக் காரண மாக அமைந்திருக்கும் உன் செல்வளம் என்றும் வாழ். வதாக” என்று குட்டுவனின் குன்றாத கொடைவளத்தைக் குறையாத சொற்களால் குறிப்பிடுகின்றார் பாலைக் கெளதமனர்.

‘ உண்மருங் لایه வரைகோள் அறியாது குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றாே றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் எ.குறச் சிவந்த ஆனத் தியாவரும் கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி

பேரா யாணர்த்தால் வாழ்ககின் வளனே.” 17. பதிப்றுப் பத்து : III: 4 : 18-22, 80