76
76
‘வருநர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாருது உணி இய பாசவர்’ சேரநாட்டில் வாழ்ந்தனர் என்பது பதிற்றுப்பத்தால் நாம் அறியும் செய்தியாகும்.
அடுத்தபடியாக, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் கொடைப் பண்புகளாகக் காப்பியாற்றுக் காப்பியனர் குறிப்பிடுவனவற்றைக் காண்போம்.
கான்காம் பத்தின் முதற் பாடலிலேயே சேரவேந்தனே வரையாத வள்ளன்மை மிகுந்த வண்டன் என்பானேடு ஒப்பிட்டுப் பேசுகின்றார் புலவர்.
‘ வெண்டிரை முந்நீர் வளைஇய வுலகத்து
வண்புகழ் கிறுத்த வகைசால் செல்வத்து வண்டன் அனையைமன் நீயே.’ காப்பியாற்றுக் காப்பியனர் நார்முடிச் சேரலைப் “பரிசிலர் வெறுக்கை’ என்றும் பாணர் நாளவை’ என்றும் கூறி, அவன்தன் அளக்கலாகாக் கொடைப் பண்பினைக் காட்டுகின்றார். தனக்கு இனிமை விறைந்த பொருள்கள் கிடைத்தாலும் அதனைத் தானே தனித்து நுகராது. பிறருக்குப் பகுத்துத் தந்து பாண் கடன் ஆற்றுகின்றான் கார்முடிச்சேரல் என்பதனை நயம்பட மொழிகின்றார் புலவர் :
“ இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்
தருகென விழையாத் தாவில்கெஞ் சத்துப் பகுத்துாண் தொகுத்த வாண்மைப் பிறர்க்கென வாழ்திரீ யாகன் மாறே.’ இதல்ை செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதனையும், “இந்திரர் அமிழ்தம் இவையவதாயினும் இனிதெனத் தனித் துண்ணுமையே சால்பு என்பதனையும் நன்கு அறிக்
19. பதிற்றுப் பத்து : IV: 1 : 21-23 -10. Hj. J. ᏗᏙ; 8 : 18-1Ꮾ