80
80
கூட்டம் கூட்டமாக விறலியர்குழாம் செங்குட்டுவன் தன் அரண்மனை சென்று, சுற்றத்துடன் விருந்துண் கிறார்கள்.
“பாமுஞ் சேறுகம் நீயிரும் வம்மின்
துயலுங் கோதைத் துளங்கியர் விறலியர் கொளைவல் வாழ்க்கை நுங் கிளையினிது உணி இயர்.’
மேலும், செங்குட்டுவன் தனக்கு என ஒருவகைச் சோறும் பரிசிலர்க்கு என வேறு ஒருவகைச் சோறும் சமைக்குமாறு தன் ஏவலரைப் பணிக்கின்ற வழக்கம் இல்லே யென்பதனைப் பரணர்.
“சோறுவேறு என்ன ஊன்றுவை அடிசில்.” என்று நயம்படக் கிளத்திக் கூறியுள்ளார்.
இனி ஆரும் பத்தின் பாட்டுடைத் தலைவனகிய ஆடு. கோட்பாட்டுச் சேரலாதனிடத்துக் காக்கைபாடினியார் கண்டகொடை வள மாண்பினைக் காண்போம்.
போர்க்களத்தில் அஞ்சாது எதிர் கின்று பகைவரைக் கொன்று வெற்றி கொண்ட இடியன்ன வன்மைபெற்ற கைகள், இரப்போர் புன்கண் தீர ஈதற் பொருட்டு மட்டுமே கவியக் கற்றிருந்தன. எத்துணை அரும் பொரு. ளாயினும் அதனே எவரிடத்திலுமிருந்தும் ஏற்பதற்கு, அவர் கைகள் கூசி கின்றன. இதனே,
‘கல்லமர்க் கடந்த கின் செல்லுறழ் தடக்கை
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரை இய
மலர்பறி யா.'” என்னும் வரிகள் விளக்கா கிற்கின்றன.
28. பதிற்றுப்பத்து : V 9 : 1.3, 29. பதிற்றுப்பத்து : V 5 : 5-13. 30. பதிற்றுப்பத்து : V 2 : 1.1.13,