82
82
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடத்துக் கண்ட கொடை மடத்தின் சிறப்பு இம்மட்டும் அன்று; இதற்கு மேலும் புலகிைன்றது பிறிதொரு பாட்டிலே. இளங் குழந்தைகளைப் பெற்றெடுத்த சிலம்பணிந்த மகளிர்ஆன்ற அறிவும், அடங்கிய கொள்கையும், திருந்திய கல்லிசையும் கொண்ட மகளிர்-ஊடற் கோலத்தோடு ஊடிய காலையில் துளிர்த்த கண்ணிருக்கு அவன் பெரிதும் அஞ்சின்ை. ஆயினும் அதனேக் காட்டிலும் இரவலர் புன்கண்ணிர்க்குப் பெரிதும் கவன்றான் என்று விறலி யாற்றுப்படையில் வைத்து விளங்கப் பாடுகின்றார் புலவர்:
- இளந்துணைப் புதல்வர் கல்வளம் பயந்த
வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை ஆன்ற அறிவில் தோன்றிய கல்லிசை ஒண்ணுதல் மகளிர் துணித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே. ’’ மேலும் அவன் காட்டில் சிறுகுடிமக்களாக வாழ்ந்த இரவலர்களின் வாழ்வு பொருள்வளம் கண்டு சிறக்க, வழிபல வகுத்துக் கொடை போற்றின்ை என்பனே,
இரவன் மாக்கள் சிறுகுடி பெருக உலகக் தாங்கிய மேற்படு கற்பின்
பல்வேறு வகைய கனந்தலை யீண்டிய மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்.” 4 காதல் வாழ்வினும் ஈதல் வாழ்விற்கு ஒருபடி சிறப்பினை வழங்கிய காவலன் ஈண்டுச் சிறுகுடி மக்கள்
33. பதிற்றுப்பத்து: V17:10-15 34. பதிற்றுப்பத்து : V19: 7.8: 14-15.