பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83



பெருங்குடிமக்களாக வளம் பல கண்ட வகை கூறப்படுகின்றது.

கொலைவினை கொண்ட சேனையும் இகல்வினை கொண்ட மன்னனும் பாணர்குடி வாழத் தண்டாது தரும் தகுதி பெற்றுள்ளனர்:

  "கொல்வினை மேவேற்றுத் தானை தானே
   இகல்வினை மேவலன் தண்டாது வீசும் 
   செல்லா மோதில் பாண்மகள் காணியர்."35

சங்க இலக்கியப் பாடல்களில் மிகுந்த அளவு பாடல்கள் பாடிய பெரும்புலவர் கபிலராவர். அவர் பதிற்றுப்பத்தின் ஏழாம்பத்தில் செல்வக்கடுங்கோ வாழி யாதனைச் சிறக்கப் பாடியுள்ளார். புலர்ந்த சாந்தும் புலரா ஈகையும் மலர்ந்த மார்பும் உடையவன் மாவண் பாரி என்றும், அவன் முழவுமண் புலர, இரவலர் இனைந்து வருந்த வாராத சேட்புலம் படர்ந்தனன் என்றும் உருக்கத்தோடு கூறி, “அளிக்கென இரக்கும் உள்ளத்தோடு யான் வரவில்லை; உன் புகழை எஞ்சியும் யான் கூறமாட்டேன்’ என்ற குறிப்போடு சேர வேந்தனின் செம்பொருட்கொடை வெறியினைச் செவ்விதின் கிளத்துகின்றார் 'பொய்யா காவிற்கபிலர்.'

போரிலே அரிதாகப் பெற்ற பொருள்களைத் தன்னைத் தேடிவரும் இரவலர்க்கு வாரி வழங்குகிறான் வண்மை நெஞ்சம் சார்ந்த வாழியாதன். அதுபோது, "இவற்றை நாம் வைத்துக்கொள்ளாமல் கொடுத்துவிட்டோமே” என நினைத்து வருந்தவில்லை. "கொடுக்குங் தோறும் மகிழவும் மாட்டான். கொடுக்கும் பொழுதெல்லாம் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பான்’ என்று அழகுறக் கபிலர் பாடுகின்றார்.

35. பதிற்றுப்பத்து VI 10: 1-3.