பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

88.

உள்ளான் என்பதனை இப்பகுதியால் புலவர் எடுத்துக் காட்டும் கயம் அறிந்து மகிழத்தக்கதாகும்.

“வருநர் வரையாச் செழும்பஃருரம், கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப’ என்றும், ஈரம் உடைமை யின் நீரோர் அனையை என்றும், கொளக்குறை படாமையின் முந்நீர் அனேயை’ என்றும் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையின் ஈகைப்பண்பினை இனிமை யுறப் புலப்படுத்தியுள்ளார் பெருங்குன்றுார் கிழார் என்னும் புலமைச் சான்றாேர்,

இவ்வாறு பதிற்றுப்பத்து என்னும் சங்கத் தமிழ் நூலில் சேர வேந்தர் எண்மரின் இனிய ஈகை வளம் இனிமையுற இயம்பப்பட்டுள்ளது. பாடல்களே இயற்றிய புலவர் பெருமக்கள் பெற்ற பரிசில்களைப் பதிகவழி அறியும் பொழுது சேர வேந்தரின் கொடை வளத்தினைக் கண்டு வியக்கத்தோன்றுகின்றது. வீரத்தின் விளைநிலமான அவர் தம். நெஞ்சமே, ஈரத்தின் பிறப்பிடமாகவும் துலங்கிய செம்மை அறிந்து பேர்ற்றத் தக்கது.