6 சேரர் தொண்டி
பண்டைத் தமிழகத்தில் நாடும் நகரமும் நனி சிறப் புற்றிருந்தன. நானில வளங்களும் என்கியைந்து நாடு ாடாக விளங்கிய காலம் சங்ககாலம் என்பதனைச் சங்க இலக்கியம் பயில்வோர் நன்குணர்வார். ‘வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு’ எனக் கூறப்பட்ட - முடியுடை வேந்தரால் முறைமையுடன் ஆளப் பெற்ற தமிழகத்தின் கரங்களும் நல்ல வாழ்வு நிலையைப் பெற்றுத் துலங்கின. காட்டுப்புறங்களில் உழவர் குடிப் பெருமக்களின் வாழ்வு பீடுறப் பிறங்கியது. முல்லையம் புறவில் ஆயர் வாழ்வு அழகுற மிளிர்ந்தது. கெய்தலங் கானலில் பரதவர் வாழ்வு பயனுற அமைந்திருந்தது. மலைவாழ் மக்களின் வாழ்வும் மாண்புறத் துலங்கியது. நாட்டுப்புற வாழ்வில் அமைதி கொலு வீற்றிருந்தது நகர வாழ்க்கையில் மனித முயற்சி யின் முன்னேற்றம் விளங்கியது; உழைப்பின் உருவகிலேகள் உயர்ந்து நகரங்களில் விளக்கம் பெற்றன. ஆரவார விலை, வேகமான பரபரப்பு நிறைந்த வாழ்க்கை நகரங் களில் காணப்பட்டன. எனவேதான் பண்டைத் தமிழ்ப் புலவர் பெருமக்கள் நகரங்களைக் குறிப்பிடும் பொழுது அங்ககரங்களில் எழும் ஒலியினையும் விடாது குறித் துள்ளனர் :
‘ மாட மதுரையும்
பீடார் உறந்தையும் கலிகெழு வஞ்சியும்
ஒலிபுனற் புகாரும். ‘
என்ற பாடற் பகுதியினைக் காண்க,
1. சிலப்பதிகாரம்; வேனிற்காதை: 3.4