பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90

சங்க காலத்தில் பாண்டிய மன்னருடைய தலைநகர மாகப் புகழ் பெற்று ஓங்கியது மதுரைமா நகரமாகும். சோழ நாட்டின் கோநகரமாகச் சிறந்து கின்றது உறங்தை யம்பதியாகும். இவை போன்றே சேர நாட்டிற்குச் செழும் பதியாக, தலைநகராக வாய்த்தது வஞ்சிமாநகரமாகும். தலைநகரங்களன்றியும் கடற்கரைப் பட்டினங்களும் வாணிப மையங்களாகப் பெருவாழ்வு பெற்றுச் சீரும் சிறப் புடன் துலங்கின. பாண்டி நாட்டின் துறைமுகப் பட்டின மாக அங்காளில் சிறந்து கின்றது கொற்கைத் துறைமுக மாகும். பாண்டி நாட்டின் தாமிரபரணியின் சங்கமத், துறையில் அமைந்த பழம்பெரும் துறைமுகப் பட்டினம் இதுவே.

இக்கொற்கை ‘முத்துப்படு மரபிற் கொற்கை” என்றும், கற்றேர் வழுதி கொற்கை முன்துறை’ என்றும். “புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்துறை’ என்றும் சங்க இலக்கியங்கள் கொற்கையின் புகழ் பாடுகின்றன. “முட்டாச் சிறப்பின் பட்டினம்’ எனப் பட்டினப்பாலே புகார் நகரைப் புகழ்ந்து பேசும். சேர மன்னர்க்கு. வளங்கெழு முசிறி'யை யடுத்த கிலேயில் தொண்டி சிறப். புற்று விளங்கியது.

கி. பி. 60-இல் வாழ்ந்தவகைக் கருதப்படும் எகிப்திய கிரேக்க ைெருவன் எழுதிய பெரிப்ளுஸ்” என்னும் பிரயாண நூலில் தொண்டியைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. அக்குறிப்பினின்று தொண்டி சேர நாட்டைச் சேர்ந்த சிறப்புமிக்க நகரம் என்பதனையும், முசிறித் துறைமுகத். திற்கு ஐங் நூறு ஸ்டேடியா (ஏறத்தாழ ஐம்பத் தேழரை மைல்) தொலைவில் அமைந்திருந்தது. என்பதனையும், முசிறியையும் தொண்டியையும் இணைத்து ஆறு ஒன்று ஒடியது என்பதனேயும் அறியலாம். பெரிப்ளுஸ் நூலில் தொண்டி திண்டிஸ் (Tyndis)