பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

93

அாழ்க்க முற்றிய தெங்கினேயும், அகன்ற மருதநில வயல கல்ாயும், மலையாகிய வேலியையும், கிலாப் போன்ற மணலை யுடைய அகன்ற கடற்கரையையும், தெளிந்த கழியிடத்துத் நிப்போலும் மலர்ந்துள்ள பூவினையுமுடைய குளிர்ந்த கொண்டி மாகரம்’ என்ற குறிப்புப் பெறப்படுகின்றது. இக்கருத்திற்கு அரண் செய்யும் வகையிலேயே சங்கத் தொகை நூல்களில் சான்றுகள் அமைந்திருக்கக் காணலாம்.

மலர்கள் காண்பார் கண்களைப் பிணித்து கெஞ்சை யள்ளும் நீர்மையன. இத்தகு மலர் கிறைந்த சோலைகள் தொண்டி நகரில் அமைந்து இயற்கைக் காட்சிகள் செறிந்த இனிமை நிறைந்த இடமாகக் காட்சி தந்தன. ஐங்குறு. நூற்றின் நெய்தல் நூறில் ‘தொண்டிப் பத்து’ என்னும் பகுதியில் தொண்டியின் கலம் விளங்கப் பேசப் படுகின்றது.

“ தொண்டித் தண்கமழ் புதுமலர். ‘

“ முண்டக நறுமலர்

கமழும் தொண்டி. ‘’

“ கள்கா றும்மே காணலந் தொண்டி ‘7

தொண்டி நகரம் சேரனுக்கு உரியதாயிருந்தது என்ற செய்தியும் பாடல்களில் கூறப்படுகிறது, மேலும், அது அவனுடைய பெருநகராகவும் விளங்கியது என்பதும் அறியப்படுகிறது.

‘ கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும்

5. ஐங்குறுநூறு: 176: 1-2 1. ஐங்குறுநூறு: 177; 3-4 7. புறநானூறு: 48 : 4