பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

96

இக் குறுங் தொகைப் பாட்டில் தொண்டியின் மீன் வளம் சுட்டப்படுகின்றது. மேலும் தொண்டிப் பட்டி னத்தில் வாழும் பரதவர்குல மக்கள் உப்பு விளைவித்தலே யும் மீன் பிடித்தலையும் தொழிலாகக் கொண்டிருந்தனர். நெய்தல்கிலக் குறுமகள் ஒருத்தி உப்பை விற்று அதற்கு மாற்றாகத் தொண்டி நெல்லினைப் பெற்றாள். அங்கெல் வினைக் குற்றி அரிசியாக்கி வெண் சோறு பொங்கிள்ை. கொழுவிய மீன் கொண்டு குழம்பு வைத்தாள். மீன் வேட்டம் மேற்கொண்ட தன் தந்தைக்கு இவ் உணவினேப் படைத்தாள் என்று அகநானூற்றுப் பாடலொன்று குறிப் பிடுகின்றது:

“ பெருங்கடற் பரப்பில் சேயிருல் நடுங்க

கொடுக்தொழில் முகந்த செங்கோல் அவ்வலை நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு உப்புகொடை கெல்லின் மூரல் வெண்சோறு அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து கொழுமீன் தடியொடி குறுமகள் கொடுக்கும் திண்டேர்ப் பொறையன் தொண்டி. ‘'’ தொண்டித் துறைகளில் மீன் வளம் மிகுதியாக இருந்த காரணத்தால் பழைய படகுகளைச் சிதைவு, போக்கிய புதுவலேப் பரதவர் மோட்டு மணல் அடை கரைகளில், வலைப்பட்ட மீன்களைப் பகுத்துப் பாக்கத்து வாழும் மக்கட்கெல்லாம் வழங்குகின்றனர்.

‘ பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்

மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளங்கெழு தொண்டி: ‘ அடுத்துத் தொண்டி கெல் குறுந்தொகைப் பாட் டொன்றில் சிறப்பித்துப் பேசப்ப்ட்டுள்ள து. தலைமகளே.

18. அகநானூறு: 60: 1-7 19. அகநானுறு: 10:10-13