97
97
விட்டுப் பிரிந்த தலைமகன் குறித்த காலங் கடந்து மீண்டான் தன் பிரிவை ஆற்றியிருந்த தலைமசளேக் கண்டு உவந்தான். A மகளே ஆற்றிய அருமைப்பாடு தோழியுடையது எனக் கருதினன். தோழியைப் பாராட்டத் தொடங்கின்ை. தொழியோ அப்பாராட்டுரைக்குத் தான் தகுதிப்பாடு உடையவள் அல்லள் என்றாள். காக்கை நாளும் தலைமகன் வருவன் என்று உணர்த்தும் வழிக் கரைந்ததனால் தலைமகள் ஆற்றியிருந்தனள் எனப் புகன்றான். அத்தகு காக்கைக்கு வள்ளியின் காட்டுப் பசுக்கள் பயந்த நெய்யினையும், கொண்டி நெல்லாலான வெண்ணெல்லரிசிச் சோற்றினையும், கலந்து ஏழு பாத்திரங்களில் ஏந்திக் கொடுத்தாலும் விருந்தினர் வருவர் எனக் கரைந்த காக்கைக்குரிய சிற்றளவு பலியே யாகும் என மொழிந்தாள்.
“ திண்டேர் கள்ளி கானத் தண்டர் பல்லா பயந்த நெய்யிற் ருெண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத் தேந்தினுஞ் சிறிதென் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.” “ காக்கையை இங்ஙனம் பாடிய சிறப்பால் இப்பாடலைப் பாடிய கல்லிசைப் புலமை மெல்லியலார் காக்கை பாடினியார் வான்ற பெயர் பெற்றார்.
பச்சை அவலே இடித்த வயிரம் பாய்ந்த கரிய உலக்கை யைக் குழந்தையெனப் பாவித்து, அழகிய கதிரையுடைய நெற்பயிர் கிறைந்திருக்கும் வயல்களின் வரப்பாகிய அணையில் படுக்கவைத்து, அதைக் கண் வளரச் செய்து விட்டு விளையாட்டயர்வர் என்று ஒண்டொடியணிந்த தொண்டி நகர்ச் செல்வ மகளிரின் சிங்தை யினிக்கும் சிரிய
_
20. குறுந்தொகை: 210
T