பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக வரலாறு

9


னர், அதனை அங்குள்ள அறிஞர் எல்லோரும் வாசிப்பர். பிறகு அப்பெயர் ஒர் ஒலையில் வரையப் படும். இங்ங்ணம் தேர்ந்தெடுக்கிப்பட்டவரே, அக் குடும்பின் பிரதிநிதியாவர். இவ்வாறு பிற குடும்பு கட்கும் தேர்தல் நடைபெறும். இங்ங்னம் தேர்ந் தெடுக்கப்பட்டவரே ஓராண்டுவரை ஊராட்சிக் கழகத்தினர் ஆவர். உட்கழகங்களும் வேலைகளும்

ஒவ்வோர் ஊராட்சிக் கழகத்திலும் சில உட் கழகங்கள் இரு க் கு ம். தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினருள் வயதிலும் கல்வியிலும் அறிவிலும் அநுபவத்திலும் மிக்கவர் பன்னிருவரைச் சம்வத்சர வாரியராகத் தேர்ந்தெடுப்பர். மற்றவருட் சிலர் ஏரிவாரியராகவும், சிலர் பொன்வாரியராகவும், சிலர் பஞ்ச வாரியராகவும், மற்றுஞ் சிலர் தோட்டவாரி யராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். இங்ங் ன ம் ஊராட்சிக் கழகம் ஊர்த்தேவைகட்கு ஏற்பப் பல உட்கழகங்களாகப் பிரிந்து நின்று கடனுற்றும்.

நியாய விசாரணை செய்தலும் அறநிலையங்களை மேற்பார்வை இடுதலும் சம்வத்சர வாரியர் கடமை. ஏரி, குளம், ஊருணி முதலிய நீர் நிலைக்ளைப் பாது காத்தலும் விளை நிலங்கட்டு வேண்டுமளவு நீரைப் பாயச் செய்தலும் ஏரி வாரியத்தார் கடமை. நிலங் கள், தோட்டங்கள் இவற்றைப் பற்றிய எல்லாவற் றையும் கவனித்தல் தோட்டவாரியர் தொழிலாகும். பலவகையாலும் வாங்கப்பட்ட காசுகளை ஆராய்வது பொன்வாரியர் பொறுப்பாகும். ஊரில் எப்பொழு தேனும் பஞ்சம், வெள்ளச்சேதம் இவை ஏற்படின், ஊராரைக் கா ப் ப த ற் கு முன்னேற்பாடாக ஆண்டுதோறும் குடிமக்களிடம் 'பஞ்ச நெல் முதலி யன வாங்கிச் சேமித்தல் பஞ்ச வாரியர் தொழிலா கும். இவ்வூராட்சியினர் பெருமக்கள் எனவும் 'ஆளுங்கனத்தார் எனவும் வழங்கப்பட்டார்கள். இவர்களது ஆட்சிக்குரிய மாளிகை ஒன்று ஒவ் வொரு சிற்றுாரிலும் இருந்தது.