பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலத் தமிழ்

99

.

புதியவராகத் தமிழகம் புகுந்த வடமொழியாளர் (பிராமணர், சமணர், பெளத்தர் முதலியோர்) ஆரியர் எனப்பட்டனர். அவர்கள் தொடக்கத்தில் தமிழ்பேச அறியாது துன்புற்றனர். அவர்கள் பேசிய தமிழ் தமிழர்க்கு நகைச்சுவையை உண்டாக்கியது. நகைச் சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறும் தமிழும் குருடரும் முடவரும் செல்லும் செலவும்...... போல் வன," என்று பேராசிரியர் தொல்காப்பியம் மெய்ப் பாட்டியலில் கூறியுள்ளமை கவனிக்கற்பாலது.

பிறமொழிக் கலப்பு

கி. பி. 17-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த குமரகுரு பரர் டில்லி பாதுஷாவிடம் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் சலாம், சொக்காய் முதலிய பிறமொழிச் சொற்களைத் தம் பாக்களில் கையாண்டுள்ளார். இசு லாம் தமிழகத்தில் பரவிய காரணத்தாலும் முசுலிம் புலவர்கள் தங்கள் சமய நூல்களைப் பாடநேர்ந்த கார ணத்தாலும், அரபுச் சொற்களும், பாரசீகச் சொற் களும், இந்துஸ்தானிச் சொற்களும், உருதுச் சொற். களும் தமிழிற் கலந்தன. சீருப்புராணம் இவ்வுண் மையை விளக்கத் தக்க சான்ருகும், -

ஜமீன், சிபாரிசு, சிப்பந்தி, சிப்பாய், சுமார், பந். தோபஸ்து, தஸ்தாவேஜ், பக்கிரி, மேஜை, ரஸ்தா என்பன பாரசீகச் சொற்கள்.

ஆசாமி, அநாமத், இலாகா, கஜானு, காடிகான, காய்தர், ஜப்தி, மாமூல், வசூல், முனிசீப் என்பன அராபியச் சொற்கள்

அசல், அந்தஸ்த், அபின், அல்வா, அம்பாரி,. ஆஜர், இஸ்திரி, உஷார், குமாஸ்தா, குல்லா, ஜமுக். இளம், ஜாப்தா, ஜல்தி, பஞ்சாயத் எனபன இந்துஸ்தானி சொற்கள். -

முகலாயர் ஆட்சிக்காலத்தில் தென்னுட்டில் கம் செய்ய வந்த போர்த்துகீசியர் கூட்டுறவர்ல்