பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இலக்கிய அமுதம்


(1) குடிகளுக்கு நிழல அருளி அவர் மனம் மகிழ ஆட்சி புரிபவனே செங்கோல் அரசன்,

(2) கல்வி, கேள்வி, ஒழுக்கங்களிற் சிறந்த புலவர் பெருமக்களது பாராட்டுப் பெறுதலே காவ ல்ன் கடமை, (செங்கோல் அரசனையே ஒழுக்கம் மிகுந்த சான்ருேர் பாராட்டுவர்)

(3) இல்லை என்று இரப்பவர்க்கு இல்லை' என்று சொல்லாத செல்வ நிலையும், மன நிலையும் அரசனுக்கு இருத்தல் வேண்டும்-என்னும் மூன்று உண்மைகளும் இச் சூளுரையிலிருந்து தெளிவாகத் தெரிகின்றன. -

சோழன் நலங்கிள்ளி

இன்றைய தஞ்சை, திருச்சி மாவட்டங்களும், தென்னுற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்ப்ரம் தாலுகாவும் சங்க காலத்தில் சோழ நாடாக இருந் தன. இதனை ஆண்ட முடி மன்னர் பலர். அவருள் கவி பாடும் ஆற்றல் பெற்ற காவலர் சிலரே. அச் சிலருள்ளும் போர்த் திறனிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியவன் நலங்கிள்ளி என்பவன். ஒருமுறை அவன்மீது பகைவர் படையெடுத்தனர். அது கேட்டுச் சினந்த அப்பெருமகன்,

இப் பகைவர் என்னை வணங்கி, 'எமக்கு நினது நாட்டைத் தரவேண்டும் என்று வேண்டு வாராயின், மன மகிழ்ச்சியோடு கொடுத்து விடுவேன். அங்ங்னம் பணிவோடு வராமல் படைச் செருக்குடன் வருவதால், இவர்களை எதிர்த்துப் ப்ொருதலே முறை. இவர்களை நான் வெல்லேனயின், பொதுப் பெண்டிரது சேர்க்கையில் எனது மாலை துவள்வ தாக,” என்று சூளுரை புகன்ருன்.

இச் ಲ್ಜಣTUTEು இவனைப்பற்றி நாம் அறி

.6)/60T ili T60361 i