பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக வரலாறு

7


ஏற்பட்ட பின்பு தமிழகம் அமைதியுற்றது. மதுரை யிலும் தஞ்சையிலும் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. பின்பு தஞ்சையில் மகாராட்டிரர் ஆட்சி உண்டானது. விஜயநகர ஆட்சிக்குப் பின்பு தமிழகம் கருநாடக நவாபுகளின் ஆட்சிக்கு உட்பட்டது. யாண்டும் ஓயாத போர்கள் நடைபெற்றன. வாணிகத்துக் காக வந்த ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் உள் நாட்டுப் போர்களில் ஈடுபட்டுத் தமிழகத்தை மேலும் பாழாக்கினர். இறுதியில் ஆங்கில ஆட்சி ஏற்பட் டது. அதுவும் ஒழிந்து இன்று நம் நாட்டில் குடி யாட்சி நடைபெறுகிறது.

ஆட்சி முறை

சங்க காலத்தில் நாட்டை ஆட்சிபுரிவதில் அரச னுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண்பேராய மும் இருந்தன. பிற்காலத்தில் பலதுறை அமைச் சர்களும் பலதுறை அலுவலர்களும் இருந்தனர் என் பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. அரச னுடனிருந்து ஆட்சி முறைகளைக் கவனித்த அமைச் சர்கள், ! உடன் கூட்டத்து அதிகாரிகள் எனப்பட் டார்கள். நாடு பல மண்டலங்களாகவும், மண்டலம் வளநாடு, நாடு, கூற்றம், சிற்றுார் என்றும் பலவாறு பிரிக்கப்பட்டிருந்தன. i

ஊராட்சி

ஒவ்வொரு கிராமமும் ஊரவையார் ஆட்சியில் இருந்தது. ஒவ்வோர் ஊரும் பல குடும்புகளாகப் (wards) பிரிக்கப்பட்டிருந்தது. கால்வேலி நிலமும் சொந்த மனையும் உடையவராய், பல சாத்திர நூல் களையும் கற்றுப் பிறர்க்கு உணர்த்த வல்லவர்ாய், செயலாற்றலில் திறமை உடையவராய், முப்பத்தைந் துக்கு மேற்பட்டு எழுபத்தைந்துக்கு உட்பட்ட வய தினராய், நல்வழியில் சம்பாதித்த பொருளும் தூய வாழ்க்கையும் உடையவராய், மூன்று ஆண்டுகட்கு உட்பட்டு எந்த நிறைவேற்றுக் கழகத்திலும் உறுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/8&oldid=1401477" இலிருந்து மீள்விக்கப்பட்டது