பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ்

89


இடைக் காலத்தின் தொடக்கத்தில் ஏற்பட்டது வெளிப்படாமலிருக்கின்றது. பின்னர்க் கி.பி. 18-ஆம் நூற்ருண்டின் தொடக்கத்திலிருந்த அர பத்த நாவலர் என்பார் பரத சாஸ்திரம்' என்றதோர் நூல் செய்துள்னார்.”7 -

19-ஆம் நூற்ருண்டின் முற்பாதியில் கொட்டை யூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்மீது பாடிய குறவஞ்சி நிாடகம் குறிப்பிடத் தக்கது. அந்நாடகம் தஞ்சைப் பெரிய கோவிலில் நடிக்கப்பட்டு வந்தது. அதே நூற்றண் டின் கடைப் பகுதியில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பாடிய மனேன்மணிய நாடகமும் போற்றத் தகக தாகும். 20-ஆம் நூற்ருண்டில்

நாம் வாழும் இவ்விருபதரம் நூற்ருண்டின் முற். பாதியில் நாடகக்கலை நன்கு வளர்ந்தது. பம்மல் சம்பந்த முதலியார் எழுதியுள்ள பல நாடகங்கள் நாடெங்கும் நடிக்கப் பெற்றன. சிறந்த நாடக ஆசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதியுள்ள நாடகங்கள் ப்லவாகும். அவற்றுள் அபிமன்யு சுந்தரி, பார்வதி கல்யாணம், பிரபுலிங்க லீலை, வள்ளி திருமணம், பாதுகாபட்டாபிஷேகம், இலங்காதனம், அல்லி அர்ஜானு, சிறுத் தொண்டர், சதி அனுசூயா, பவளக்கொடி, சுலோசன சதி, மணிமேகலை, மிருச் சகடி, சீமந்தனி, சாவித்திரி, கோவலன், பிரகலாதன், ரோமியோவும் ஜாலியத்தும் என்பன குறிப்பிடத் தககவை.

கண்ணைய (நாயுடு) நாடகக் குழுவினர் நடித்து வந்த கிருஷ்ண லீலை, தசாவதாரம் முதலிய நாடகங் கள் 50 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சிறந்து விளங்கின. இந் நூற்ருண்டின் முற்பகுதியில் சங்கர தாஸ் சுவாமிகள் இணையற்ற நாடக ஆசிரியராக இலங்கினர். இவரது மாணவர்கள் தமிழகம் முழு

7. வி. கோ. கு. தமிழ் மொழியின் வரலாறு. பக். 46-41.