பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலத் தமிழ்

93


வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது. அவர்தம் பிரதி நிதிகளாக இருந்து சோழநாட்டையும் பாண்டிய நாட்டையும் நாயக்க மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்கட்குப் பின்பு கருநாடக நவாபுகள் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. சுருங்கக் கூறின், சங்க காலத்திற்குப் பிறகு ஏறத்தாழ 400-வருடகாலமே (கி.பி. 900-1300) தமிழர்சர் ஆட்சி. சோழப் பெரு நாட்டில் இருந்ததென்று கூறலாம்.

சமயநிலை

புதியவராய்த் தமிழகம் புகுந்த களப்பிரரும் முற். காலப் பல்லவருள் பலரும் சமண பெளத்த சமயங் களை ஆதரித்தனர். இக்காரணத்தால் சைவ வைணவ சமயங்கள் பேரளவு குன்றின. பெளத்த சமயத்தை விடச் சமணசமயமே மிகு ந் த செல்வாக்குப். பெற்றது.

குப்தர் பேரரசு வட இந்தியாவிலிருந்தபொழுது, (கி. பி. 300-600) அதுகாறும் செவி வழியாக வந்த புராணச் செய்திகளும் பிறவும் நூல்வடிவில் அமைக் கப்பட்டன. சமணத்தையும் பெளத்தத்தையும் ஒடுக்கத்தக்க முறையில் பக்திநெறி புதுவதாக அமைக்கப்பட்டது. இறைவனை ஆடலாலும் பாட லாலும் வழிபடலாம், எவரும் வழிப்டலாம், என்ற விரிவான போக்கில் பக்திநெறி அமைந்தது. வட

இந்தியாவில் தோன்றிய இந்நெறி தமிழகத்திலும்

பரவத் தொடங்கியது. வடக்கே இருந்து வந்த திருமூலர் என்ற சைவப் பெரியார் வடமொழியி " லிருந்த சைவ ஆகமத் கருத்துக்களை மூவாயிரம் பாக்களைக்கொண்ட் திருமந்திரமாகப் பாடியுள்ளார். அவர் காலம் ஏறத்தாழக் கி.பி.400-600 என்னலாம்.

பத்தி நெறியைப் பின்பற்றித் தமிழகத்தில் பல

கோவில்கள் எழுந்தன.

வேதங்களில் வல்ல வேதியர் மிகப்பலராகப் பல்

லவர் காலத்தில் தமிழகம் புக்கனர். பல்லவ மன்

னர் அவர்களுக்குப் பல சிற்றுார்களை மானியமாக