பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச்சந்தன் அமைச்சன் 97 செயல்," என்று பணிவுடன் மறுத்துரைத்தான். அது கேட்ட சச்சந்தன், " என்பொருட்டு நீ மறுக்காது இவ். வரசை ஏற்று நடத்தவேண்டும், ' என்று அன்புடன் வேண்டினன். "அண்ணல்தான் உரைப்பக் கேட்டே அடுகளிற்(று) எருத்தி னிட்ட வண்ணப்பூங் தவிசு தன்னே - ஞமலிமேல் இட்ட தொக்கும் கண்ணகல் ஞாலம் காத்தல் ' எனக்கெனக், கமழும் கண்ணி மண்ணகம் வளரும் தோளான் மறுத்துங் மொழியல்' என்ருன்." இவ்வாறு கூறக்கேட்ட கட்டியங்காரன் அரசனின் அடி களில் விழுந்து வணங்கின்ை. “அரசே ! தாங்கள் கோப்பெருந்தேவியைப் பிரியாது கூடிப் பேரின்பம் பெறுக! யான் பழியெழாவாறு இவ் அரசபாரத்தை ஏற்று இனிது நடத்துவேன்,' என்று மொழிந்து அவ். விடத்தைவிட்டு அகன்ருன். கிமித்திகன் நேர்மை இச் செய்தியை அறிந்த அமைச்சனகிய நிமித் திகன் என்பான், அரசனை அணுகி, “அரசே! நீவிர் அரசினைப் பிறைெருவன்பால் அளிப்பது முறைமை யன்று ; அவ்வாறு செய்யின் நிலமும் திருவும் நும்மை விட்டு நீங்கும்,' என்று அறிவுறுத்தின்ை. அதனைக் கேட்ட சச்சந்தன், ' நிமித்திக! நீ இவ்வாறு இயம் பற்க! கட்டியங்காரன் எனக்கு உயிரனையான் ; யான் வேறு அவன் வேறல்லன் ; இருவரும் ஒருவராவோம்; முன்னம் நிகழ்ந்த பன்னெடும் போர்களில் எனக்கு வெற்றி விளைத்த வீரன் அவன் ; அன்னவனுக்கு இ. அ.-7