பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இலக்கிய அமைச்சர்கள் யொன்றை நிறுவி, இதனை அம்பெய்து வீழ்த்துப வர்க்கு என் மகள் இலக்கணையை மணஞ்செய்து தரு வேன்,' என்று கோவிந்தராசன் காவலர் பலர்க்கும் கட்டியங்காரனுக்கும் ஓலை விடுத்தான். அதைக் கண்ட கட்டியங்காரன் தன் மக்கள் நூற்றுவருடன் வந்து சேர்ந்தான். வந்திருந்த அரசர்கள் அனைவரும் அத் திரிபன்றியை எய்யமாட்டாராய் உளந்தளர்ந்து அகன் றனர். ஆங்கிருந்த சீவகன் அதனை வீழ்த்தி வெற்றி யுற்ருன். உடனே கோவிந்தராசன், ' குருகுலத்தில் தோன்றிய கொற்றவன் சீவகன், என்பதை ஆங்கிருந்த வேந்தர்களுக்கு விளக்கினன். அப்பொழுது வான கத்தே ஓர் இயக்கன் தோன்றி, சீவகன் என்னும் சிங்கம், கட்டியங்காரணுகிய களிற்றின் உயிரைச் செகுக் கும்,' என்று கூறினன். கட்டியங்காரனுடன் கடும்போர் உடனே கட்டியங்காரன் சினங்கொண்டு போருக்கு எழுந்தான். அவன் படை திரண்டெழுந்தது. இரு திறத்தாருக்கும் கடும்போர் நிகழ்ந்தது. கட்டியங்காரன் மக்கள் நூற்றுவரும் அப்போரில் மாண்டொழிந்தனர். முடிவில் கட்டியங்காரன் தாமரை வடிவாகப் படை வகுத்துக்கொண்டு போருக்கு மூண்டெழுந்தான். தன் மைந்தர்கள் சிங்கக் குருளைகளைப் போலக் குருதி வெள் ளத்தில் கிடப்பது கண்டு நெஞ்சம் குமுறின்ை. அப் போது எதிர்ப்பட்ட சீவகனை நோக்கி அசனிவேகத்தின் மேல் அமர்ந்தவாறே பேசத் தொடங்கின்ை. போர்க்களத்தில் வீரமும் நீதியும் வீரனே! நல்வினையுடையாரை நஞ்சும் கொல்லு வதில்லை ; தீவினையுடையவராயின் சாவாமையைத்