பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இலக்கிய அமைச்சர்கள் இயற்பெயர் அருண்மொழித்தேவர் என்றே உமாபதி சிவனர் உரைத்துள்ளார். ஆனல் திருமழபாடிச் சிவன் கோவிலிலுள்ள கல்வெட்டு ஒன்றில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத் தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் இராமதேவனை உத்தம சோழப் பல்லவராயன் ' என்று சேக்கிழார் குறிக்கப்படுகின்ருர். ஆதலின் சேக்கிழாரது இயற் பெயர் : இராமதேவன்' என்று கல்வெட்டு ஆராய்ச்சி யாளர் சொல்லுவர். சேக்கிழார் புலமைச் சிறப்பு சேக்கிழார் இளமையிலேயே செந்தமிழ் நூல்களை ஐயந்திரிபற ஒதியுணர்ந்தவராதல் வேண்டும். அவர் பொதுமறையாகிய திருக்குறளைப் போற்றிக் கற்றிருத் தல்வேண்டும். அதேைலயே அநபாய சோழன் தன் அவையிலிருந்தோரை வினவிய மூன்று விளுக்களுக்கும் ஏற்ற விடைகள்ைத் தாம் கேட்ட்வளவில் ஏட்டில் எழுதி அனுப்பினர். நிலம், மலை, கடல் ஆகிய மூன்றினும் பெரியன யாவை? என்பதே அரசன் வின. சேக் கிழார் இதற்கு ஏற்ற விடைகளாக அமைந்த மூன்று. திருக்குறட்பாக்களையே எழுதியனுப்பினர். காலத்தாம் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.” கிலேயில் திரியா(து) அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.” பயன்துக்கார் செய்த உதவி நயன்துக்கின் நன்மை கடலிற் பெரிது.” அநபாயன் தனது வினவிற்கேற்ற விடைகளாக அமைந்த திருக்குறட்பாக்களைக் கண்டு வியந்தான். அவற்றை அறிந்து எழுதியனுப்பிய அறிஞராகிய சேக்