பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இலக்கிய அமைச்சர்கள்

6 இலக்கிய அமைச்சர்கள் அரசர்க்கு அவ் அமைச்சர்கள் உலக நன்மையைக் கருதி இடித்துரைக்கும் கடப்பாடுடையர் என்று குறிப் பிட்டுள்ளார். ' உலப்பில் உலகத்(து) உறுதியே கோக்கிக் குலேத்தடக்கி நல்லறம் கொள்ளார்க்(கு) உறுத்தல் மலைத் தழு(து) உண்ணுக் குழவியைத் தாயர் அழைத்துப்பால் பெய்து விடல்.’ என்பது அவ் அரசப் புலவரின் பட்டறிவில் எழுந்த பாடலாகும். கச்சியப்பர் காட்டும் அமைச்சர் கந்த புராணம் தந்த செந்தமிழ்க் கவிஞராகிய கச்சி யப்பர், அமைச்சர் இலக்கணத்தைச் சுருக்கமாக வகுத் துரைத்தார். நன்னெறி காட்டும் பொன்னனைய நீதி களை மன்னவர் செவியில் அவர்கள் வெறுப்பினும் அழல் மடுப்பது போல் சொன்னவரே நல்லமைச்ச ராவர் என்ருர் கச்சியப்பர். மன்னவர் செவியழல் மடுத்த தாம்என கன்னெறி தருவதோர் நடுவு நீதியைச் சொன்னவர் அமைச்சர்கள் ' என்பது அவர் வாக்கு. குமரகுருபரர் கூறும் அமைச்சர் நீதிநெறியை விளக்கிய குமர குருபர அடிகளார் அமைச்சரை யானைப்பாகர் என்று குறிப்பிட்டுள்ளார். பாகன் செலுத்தும் நெறியிலேயே யானை பணிந்து .ெ ச ல் லும் பண்புடையது. அத்தன்மையனுகவே அமைச்சன் செலுத்தும் நன்னெறியில் அரசன் செல்ல வேண்டும். மதத்தால் யானை சீறினும் பாகன் வில