பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. வள்ளுவர் கண்ட நல்லமைச்சர் திருக்குறட் சிறப்பு தொன்மை வாய்ந்த தமிழகத்திற்கும் தூய்மை வாய்ந்த தமிழ் மொழிக்கும் வையகம் போற்றும் வான் புகழைத் தேடித் தந்தவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஒருவரே. அவர் அருளிய திருக்குறள் நூலுக்கு ஒப்பாகவோ உயர்வாகவோ உலகில் பிறி தொரு நூல் இன்னும் தோன்றவில்லை என்பது அறிவிற் சிறந்த ஆன்ருேர் கண்ட முடிபு. அத்தகைய ஒப்புயர்வற்ற ஒரே நூலைத் திருவள்ளுவர் உலகம் உய்யுமாறு வகுத்தருளினர். அந்நூலுள் அவர் சொல் லாத பொருள் ஒன்றில்லை ; எல்லாப் பொருளும் அதன்கண் உள்ளன என்று அறுதியிட்டு உரைப்பர் ஆன்ருேர். பல்கலைக் களஞ்சியம் உலகம் போற்றும் பொதுமறையாகிய திருக்குறள் அறத்தின் திறங்கான விழைவார்க்கு அறநூலாக விளங்கும். அறிவியல் காண விரும்புவார்க்கு அஃதோர் அறிவியல் நூலாகவும் திகழும். வீட்டின்பம் காண விழைவார்க்கு வியத்தற்குரிய ஞான நூலாகவும் அது விளங்கும். இலக்கிய இன்பம் காண எண்ணுவார்க்கு நவில்தொறும் நயந்தரும் நல்லதோர் இலக்கியமாகவும் இருக்கும். காமச்சுவை காணக் கருதுவார்க்கும் கழி பேரின்பம் வழங்கும் கருவூலம் அது. அரசியல் நுட்பம் காண முற்படுவாருக்கு அஃதோர் அரிய அரசியல் நூலாகவும் மிளிரும்.