பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கண்ட நல்லமைச்சர் 1} திருவள்ளுவர் பத்து அதிகாரத்தால் பரக்க விரித்துரைக் கின்ருர். அவர் அமைச்சியலில் வகுத்துள்ள அமைச்சு சொல்வன்மை, வினைத்துய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை, தூது, மன்னரைச் சேர்ந்தொழுகல், குறிப்பறிதல், அவையறிதல், அவையஞ்சாமை என் னும் பகுதிகளில் அமைச்சர்க்கு அமைய வேண்டிய பண்புகள் அனைத்தையும் விளக்குகின்ருர். அமைச்சன் அரசியற் செயலை ஆற்றுங்கால் அதனைச் செய்தற்கேற்ற கருவிகளும் காலமும் செய் யும் முறையும் செயலும் ஆகியவற்றை எண்ணித் துணியும் திண்ணிய அறிவாளனுகத் திகழவேண்டும். உள்ளத்துறுதியும், குடிகளைக் காக்கும் கொற்றமும், அற நூல்களைக் கற்றுச் செய்வன செய்து, தவிர்வன தவிரும் பெற்றியும், முயற்சியும் ஆகிய பண்புகளை அவன் பெற்றிருக்கவேண்டும். பகைவர்க்குத் துணை யாய் இருப்பாரைப் பிரிக்க வேண்டின் பிரித்தலும், தமக்கு வேண்டியவர்கள் பிரிந்து போகாதவாறு பேணிக் கொள்ளுதலும், முன்னுெரு காரணத்தால் பிரிந்தவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டின் சேர்த்துக் கொள்ளுதலும் ஆகிய செயல்களில் வல்ல வகை அமைச்சன் இருத்தல் வேண்டும். செயல்களை ஆராய்தல், ஆராய்ந்தபின் செய்தல், அதில் உறுதி யாக நின்று உழைத்தல் இவற்றில் வல்லவனுகவும் அமைச்சன் இருத்தல் வேண்டும். நீதிநூல்களை ஓதி உணர்ந்து அடக்கமாகப் பேசும் அரிய பண்பை அவன் பெற்றிருக்கவேண்டும். இயற்கையான நுண் ணறிவும் செயற்கையான நூலறிவும் சிறப்பாக அவன் பால் அமையவேண்டும். நூலறிவால் செயலாற்றும் திறங்களைத் தெளிவுற அறிந்திருந்தாளுயினும் உலக