பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இலக்கிய அமைச்சர்கள் இயற்கையை அறிந்தாற்றும் இயல்புடையணுக இருக்க வேண்டும். அாசன் தான் கூறும் அறிவுரையை இகழ்ந்து புறக்கணித்தாலும் அவனுக்கு உறுதி பயக்கும் உண்மைகளை எடுத்துரைக்கவும் இடித்துரைக்கவும் தயங்காதவனுக இருக்கவேண்டும். இவ் இயல்புகள் எல்லாம் ஒருங்கு அமையப் பெற்ற பெருங்கலைச் செல் வனே அரசினைப் பேணும் அருந்திறல் அமைச்ச வைான். அமைச்சனது சொல்வன்மை மேலே கூறிய திறமெல்லாம் பெற்ற திருவுடை அமைச்சனுயினும் அவனுக்குச் சொல்வன்மை இன் றேல் அஃதொரு பெருங்குறையாகும். ஆதலின் அமைச்சனுக்கு நயம்பட உரைக்கும் நாவன்மை வேண்டும். வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் போன்ற அரிய பண்புகளை உடைய சொற்களை அன்புடன் பேசும் ஆற்றல் உடையவனுக அமைச்சன் விளங்கவேண்டும். இவ்வாறு அமைச்சனுக்கு அமைய வேண்டிய சொல் வன்மையை அரியதொரு குறட்பாவால் வள்ளுவர் தெள்ளிதின் விளக்கியுள்ளார். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.’ என்னும் அவரது வாய்மொழி எத்துணையோ அரிய கருத்துக்களைத் தன்பால் கொண்டு இலகுவதாகும் அமைச்சன் பேசும் சொற்கள், கேட்டவரையும் நேரிற் கேளாமல் பிறர் சொல்லக் கேட்டவரையும் வயப்படுத் தும் வல்லமையுடையனவாக இருத்தல் வேண்டும். நண்பரை அவர்தம் நட்பினின்று விலகாதவாறு பிணிக்