பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கண்ட கல்லமைச்சர் 18. கும் பேராற்றலும் பகைவரும் தம் பகைமை யொழித்து நட்புக் கொள்ளும் நல்லாற்றலும் பெற்றனவாக இருத்தல் வேண்டும். கேள்விச் செல்வமுடையாரும் அஃதில்லாருமாகிய எல்லோரையும் ஈர்த்து வயமாக்கும் இயல்புடையனவாக இருத்தல் வேண்டும். எதிர்த்து வினவினரும் வினவாதிருந்தாரும் ஆகிய அனைவரை யும் ஆர்த்துப் பிணிக்கும் ஆற்றல் உடையனவாக அச் சொற்கள் அமையவேண்டும். இவை போன்ற இனிய அரிய பண்புகள் எல்லாம் அமைந்த சொல்வன்மை யுடையானே சிறந்த அமைச்சனுவான் அவன் சொல்லத் தக்க செய்திகளை முன் சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து வகைப்படுத்திக் கோத்துக் கூறுவானுயின் அவன் காலால் இடும் பணியை மக்கள் தலையால் செய்ய விரைந்து நிற்பர். விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் கிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.” ன்ன்பது வள்ளுவர் வாய்மொழியாகும். அமைச்சனது வினைத்துய்மை நாவன்மையுடைய நல்லமைச்சன் சொல்லான் மட்டுமன்றிச் செயலானும் தூயவனுகச் சிறக்க வேண்டும். இதனை வள்ளுவர் வினைத்துய்மை என்ற பகுதியால் விளக்குகின்ருர். அரசனுக்கு இம்மையில் புகழும் மறுமையில் புண்ணியமும் பயவாத செயல்களை அமைச்சன் அறவே விட்டொழிதல்வேண்டும். தன்னை ஈன்ற அன்னை வறுமையால் பசியுற்று வாடுதலைக் கண்டிரங்கும் நிலை வந்தாலும் அதற்காகச் சான்ருேர் பழிக்கும் இழிசெயலை அமைச்சன் இயற்றல் கூடாது. அமைச்சன் அரசியல் வருவாயைப் பெருக்குதற்காகக்