பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இலக்கிய அமைச்சர்கள். தன் சிந்தையில் எழுந்த கருத்தைச் செப்பின்ை. ' கன்னியர் கற்பும் பன்னரும் அறமும் பெருந்துணை செய்யப் பாருலகைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காவல் புரிந்தேன். இதுகாறும் மன்னுயிர்க்கு உறு வதே செய்து வாழ்ந்த யான் என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். இராமனுகிய சிறந்த பெரு மகனைப் பெற்றேன். அவன் சீதையாகிய திருமகளைக் கொள்ளும் மணவினை கண்டு மகிழ்ந்தேன். நிறை குணத் தோன்றலாகிய அவ் இராமனுக்கு நிலமகளையும் மணஞ்செய்து காண விரும்பினேன். ஆதலால் இராம னுக்கு அரசினைக் கொடுத்து, யான் பிறவியை அறுக் கும் பெருந்தவம் புரிதற்கு வனம் புக நினைந்தேன். நும்முடைய கருத்து யாது ?' என்று அன்புடன் வின வின்ை. அமைச்சர் இசைவு தயரதன் கருத்தைக் கேட்ட அமைச்சர்களுக்கு ஒருபால் மகிழ்ச்சியும் மற்ருெருபால் துயரமும் ஏற்பட் டன. இராமனை அரசனுக்கும் செய்தி இன்பமூட்டிய தாயினும் தயரதன் வனம் புகுதற்கு விரும்பும் செய்தி துன்ப மூட்டியது. அதல்ை அவர்கள் இரண்டு கன்று களுக்கு இரங்கும் ஒரு பசுவைப்போல் வாளா இருந்த னர். பின்னர்ச் சிறிது ஆராய்ந்து, தயரதன் செய்யத் தக்கது அதனையன்றிப் பிறிதில்லை என்ற முடிவால் இசைந்தனர். அப்பொழுது முதலமைச்சனகிய சுமந் திரன் எழுந்து அரசனைத் தொழுது, கருத்தைச் சொல் லத் தொடங்கினன். அவையில் இருந்த அமைச்சர் கள் அனைவருடைய முகத்தாலும் அவர்கள் அகக்கருத் தைத் தெரிந்தவனுய்ச் சுமந்திரன் பேசின்ை: