பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. மனுவேந்தன் மதியமைச்சர் சிவபிரானும் செந்தமிழ்ப் புராணங்களும் தமிழில் எண்ணற்ற புராணங்கள் எழுந்துள்ளன. அவற்றுள் தலைசிறந்த புராணங்கள் மூன்று. அவை பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடற் புரணம் என்ற மூன்றுமாகும். செம்மேனி யெம்மா கிைய சிவனுக்கு இம்மூன்று புராணங்களும் மூன்று கண்கள் என்று ஆன்ருேர் போற்றுவர். அவற்றுள் பெரிய புராணம் சிவனது வலக்கண் ஆகும். திருவிளை யாடற் புராணம் அப் பெருமானது இடக்கண் ஆகும். கந்த புராணம் அக் கடவுளின் நுதற்கண் ஆகும். பெரியபுராணத்தின் பெருமை சிவபெருமானின் கண்களெனப் பாராட்டும் செந் தமிழ்ப் புராணங்கள் மூன்றனுள்ளும் முதன்மை வாய்ந்தது பெரிய புராணமே. இஃது அறுபத்து மூன்று சிவனடியார்களின் அரிய வரலாறுகளை விளக் கும் பெரிய நூலாயினும் சிறந்த காவிய அமைப்பைக் கொண்டது. காவியத்திற்கு வேண்டிய நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, ஆற்றுச் சிறப்பு, காவியத் தலைவர்களின் தொடர்ச்சியான வரலாற்றுச் சிறப்பு முதலிய பல இலக்கணங்களும் இனிதின் அமைந்த அரிய நூலாகும். வீட்டு நெறிகாட்டும் வியத்தகு காவியம் இப் பெரிய புராணமாகும். சேக்கிழார் அருளிய இந்நூல் தெய்வ மணக்கும் செய்யுட்களால் ஆகிய தனிச் சிறப்புடையது. திருவாரூர்ச் சிறப்பு இக் காவியத்தில் பேசப்பெறும் நாடு பெருவளம் படைத்த சோழநாடாகும். அந்நாட்டின் தலைநகராகப்