பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுவேந்தன் மதியமைச்சர் 25 போற்றப் பெறுவது திருவாரூர் என்னும் தெய்வத் தலம். அது நிலமகளின் திருநுதல் அணிந்த திலகம் போல்வது ; மலர்மகள் தங்கும் தாமரை மலரைப் போல்வது. அத்தகைய திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை அரசாண்ட மன்னன் மனுவேந்தன் என்பான். அவன் சோழர் குலத்தில் உதித்த முன்னேன் ஆவான். மன்னு சீர்அ பாயன் வழிமுதல் மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே.” என்று அவ்வேந்தனைக் குறித்தார் சேக்கிழார். கன்றை இழந்த பசு மண்ணில் வாழும் மன்னுயிர்க் கெல்லாம் கண்ணும் ஆவியும்ப்ோல், விளங்கிய மனுவேந்தன் தனது நீதியான ஆட்சியின் மாட்சியால் பண்டை மனுவின் பெயரைத் தனதாக்கிக் கொண்டான். இவ னுக்கு வீதி விடங்கன் என்னும் மைந்தன் ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் தேரேறி மன்னர் குமரர் தன்னைச் சூழ்ந்துவர அரச வீதியின் வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது பயமறியாத இளங் கன்று ஒன்று எவரும் அறியாவண்ணம் துள்ளி ஓடி வந்து தேர்ச் சக்கரத்தில் வீழ்ந்து மாய்ந்தது. கன்று இறந்ததைக் கண்ட தாய்ப்பசு அவ்விடத்திற்கு ஓடோடி வந்து அலறிச் சோர்ந்து நிலத்தில் வீழ்ந்து புரண்டது. இந் நிகழ்ச்சியைக் கண்ட மன்னன் மகன் இளங் கன்றுக்குப் பெருந்தீங்கு நேர்ந்ததே என்று நெஞ்சம் பதைத்தான். தேரிலிருந்து கீழே குதித்தான். கன்றும் பசுவும் இன்று என் அறிவைக் கொன்றனவே என்று உள்ளம் குலைந்தான். மாநிலம் காக்கும் மனுவேந்