பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இலக்கிய அமைச்சர்கள் நாடும் இந்நாளில் புதுக்கோட்டைச் சீமையில் உள் ளன. அவை முறையே அம்புகோயில், அம்புநாடு என்று இப்போதும் வழங்கப் பெறுகின்றன. அம்பு கோயிலில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டுக்கள் பல வற்றிலும் அவ்வூர் அழும்பில் ' என்றே குறிக்கப்பட் டுள்ளது. அழும்பில் நாட்டு வளம் அழும்பில் நாடு வளம் படைத்த திருநாடு என் பதைப் புலவர் பலரும் கண்டு போற்றியுள்ளனர். குட வாயில் கீரத்தனர் என்னும் புலவர் தம் நாட்டு வளத்தை அழும்பில் நாட்டு வளத்துடன் ஒப்பிட்டு உரைக்கின்ருர். அழும்பில் அன்ன அரு.அ யாணர் பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை தண்குட வாயில் அன்ைேள்.' என்பது அவர் பாடிய அகப்பாட்டின் ஒரு பகுதியாகும். மதுரைக் காஞ்சி பாடிய மாங்குடி மருதனுர் தமது நூலில் அழும்பில் நாட்டையும் அதன் தலைவராகிய வேளினையும் வியந்து பாராட்டியுள்ளார். கிலனும் வளமும் கண்டமை கல்லா விளங்குபெருங் திருவின் வான விறல்வேள் அழும்பில் அன்ன நாடிழங் தனரும்.' என்னும் அவர் பாட்டு அடிகளால் அழும்பில் நாட்டு வளமும் அந்நாட்டுத் தலைவராகிய வேளின் திறமும் நன்கு விளங்கும். அழும்பில் நாட்டு நிலத்தையும் அதில் விளைந்துள்ள பயிர்களின் வளத்தையும் கண் ணுல் பார்த்தவர்கள் தம் பார்வையை மாற்ருது வியப் புடன் பார்த்துக்கொண்டே யிருப்பர். அத்தகைய பெரு